பக்கம் எண் :

 42. திருப்பேணுபெருந்துறை573


446. குண்டர்சாக்கியருங் குணமிலாதாருங்

குற்றுவிட்டுடுக்கையர் தாமுங்

கண்டவாறுரைத்துக் கானிமிர்த்துண்ணுங்

கையர்தாமுள்ளவா றறியார்

வண்டுசேர்குழலி மலைமகணடுங்க

வாரணமுரிசெய்து போர்த்தார்

பண்டுநாஞ்செய்த பாவங்கள்தீர்ப்பார்

பாம்புர நன்னகராரே. 10

__________________________________________________

வாய்ந்த இடமாகக் கொண்டு உமையம்மையும் தாமுமாய்த் திருப்பாம்புர நன்னகரில் விளங்கும் இறைவர் மணம் பொருந்திய தாமரை மலர் மேல் விளங்கும் பிரமனும் திருமாலும் அன்போடு அடிமுடி தேடத் வண்ணராய்க் கிளைத்த வினைகள் பலவற்றையும் தீர்த்து அருள் செய்பவராய் விளங்கும் எம் செல்வர் ஆவார்.

கு-ரை: அடிமுடிதேடிய அயனுக்கும் மாலுக்கும் அருள்செய்த செல்வர் இவர் என்கின்றது.

கடி - மணம். செடிபடுவினைகள் - தூறாக மண்டிக்கிடக்கு வினைகள். படி - தகுதி.

10. பொ-ரை: திருப்பாம்புர நன்னகர் இறைவர் குண்டர்களாகிய சமணர்களாலும் புத்தர்களாலும் மிகச் சிறிய ஆடையை அணிந்து, கண்டபடி பேசிக்கொண்டு நின்றுண்ணும் சமணத் துறவியாராலும் உள்ளவாறு அறியப் பெறாதவர். வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய மலைமகளாகிய பார்வதி தேவி நடுங்க யானையை உரித்துப் போர்த்தவர். முற்பிறவிகளில் நாம் செய்த பாவங்களைத் தீர்ப்பவர்.

கு-ரை: புறச்சமயிகட்கு அறியப்பெறாதவர் என்கின்றது. குண்டர் - பருஉடல் படைத்த சமணர்கள். சாக்கியர் - புத்தர். குற்றுவிட்டு உடுக்கையர் - மிகச்சிறிய ஆடையை உடையவர்கள். கானிமிர்த்து உண்ணும் கையர் - நின்றபடியே உண்ணும் கீழ்மக்கள். இவர்களை ‘நின்றுண் சமணர்‘ என்பர்.

வண்டு சேர்குழலி மலைமகள் நடுங்க என்றது அம்மையின் மென்மை அறிவித்தது. வாரணம் - யானை. பண்டு - முன்பு.