453. எண்ணார் தங்கள் மும்மதிள் வேவ
ஏவலங் காட்டிய வெந்தை
விண்ணோர் சாரத் தன்னருள் செய்த
வித்தகர் வேத முதல்வர்
பண்ணார் பாட லாட லறாத
பசுபதி யீசனோர் பாகம்
பெண்ணா ணாய வார்சடை யண்ணல்
பேணுபெ ருந்துறை யாரே. 6
454. விழையா ருள்ள நன்கெழு நாவில்
வினை கெடவேதமா றங்கம்
பிழையா வண்ணம் பண்ணிய வாற்றாற்
பெரியோ ரேத்தும் பெருமான்
__________________________________________________
கு-ரை: அன்பர்க்கணியராய், அல்லவர்க்குச்
சேயராய் இருப்பவர் இவர் என்கின்றது. பணிவாய் உள்ள
- துதிப்பாடல்களைப் பாடிப் பணியும், துணியார் - அன்பர்களைவிட்டு
வேறுபடாதவர். துணித்தல் - வேறாதல். சுமடர் - அறிவற்றவர்கள்:
சோதிப்பு அரியார் - சோதித்தறிதற்கும் அரியவர்.
சோதித்தல் - அளவைகளால் சோதித்தல். அணி - அழகு.
மணி - நீலமணி. நீலம் - நீலப்பூ; தேறல் - தேன்.
6. பொ-ரை: திருப்பேணுபெருந்துறை
இறைவர் தம்மை மதியாதவரான, அசுரர்களின்
முப்புரங்கள் எரிந்தழியுமாறு வில் வன்மை காட்டிய
எந்தையாராவர். தேவர்கள் வழிபட அவர்கட்கு தமது
அருளை நல்கிய வித்தகராவர். வேதங்களின் தலைவராவர்.
இசை நலம் கெழுமிய பாடல்களோடு, ஆடி மகிழும்
பசுபதியாய ஈசனும் ஆவார். ஒரு பாகம் பெண்ணுமாய், ஒரு
பாகம் ஆணுமாய் விளங்கும் நீண்ட சடைமுடியுடைய
தலைவராவர்.
கு-ரை: முப்புரம் எரித்த வீரர்; தேவர்க்கருளிய
தேவதேவர்; பெண்ணாணாய பரமர் இவர் என்கின்றது.
எண்ணார் . பகைவர். ஏவலம் - அம்பின் வன்மை. வார்
சடை - நீண்ட சடை.
7. பொ-ரை: தழைத்த மாமரத்திலிருந்து
உதிர்ந்த பழங்களை உருட்டிவரும் தண்ணிய அரிசிலாற்றின்
கரையருகே சூழ்ந்து விளங்கும் தளிர்கள் நிறைந்த
சோலைகளில் மெல்லிய நடையையுடைய அன்னங்கள்
|