தழையார் மாவின் றாழ்கனி யுந்தித்
தண்ணரி சில்புடை சூழ்ந்து
குழையார் சோலை மென்னடை யன்னங்
கூடுபெ ருந்துறையாரே. 7
455. பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த
பொருகடல் வேலி யிலங்கை
மன்ன னொல்க மால்வரை யூன்றி
மாமுர ணாகமுந் தோளும்
முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த
மூவிலை வேலுடை மூர்த்தி
அன்னங் கன்னிப் பேடை யொடாடி
யணவுபெ ருந்துறை யாரே. 8
__________________________________________________
கூடி விளங்கும் திருப்பேணுபெருந்துறை
இறைவர், விருப்பம் பொருந்திய உள்ளத்தோடு நன்மை
அமைந்த நாவின்கண் தம் வினைகெட, நான்கு வேதங்களையும்
ஆறு அங்கங்களையும் பிழையின்றி முன்னோர் ஓதிவரும்
முறையில் பெரியோர் ஓதி ஏத்தும் பெருமானார் ஆவார்.
கு-ரை: கனிந்த உள்ளத்தடியார் வேதமோதி
ஏத்தும் பெருமான் இவர் என்கின்றது.
விழை ஆர் உள்ளம் - விரும்புதலைப்
பொருந்திய உள்ளத்தோடு. நாவில் வேதம் ஆறங்கம்
பிழையாவண்ணம் வினை கெடப் பண்ணிய ஆற்றால் எனக்
கூட்டுக. அரிசில் - அரிசிலாறு.
8. பொ-ரை: ஆண் அன்னம் கன்னிமையுடைய
பெண் அன்னத்தோடு ஆடியும், கூடியும் மகிழும் பேணு
பெருந்துறை இறைவர், அழகிய கடற்கரைச் சோலைகளும்,
வெண்மையான கடல் அலைகளும் சூழ்ந்துள்ளதும், நாற்புறங்களிலும்
கடலையே வேலியாக உடையதுமான இலங்கை மாநகர் மன்னனாகிய
இராவணன் தளர்ச்சி அடையுமாறு பெரிய கயிலை
மலையைக் கால் விரலால் ஊன்றி, அவனுடைய சிறந்த
வலிமையுடைய, மார்பும், தோள்களும் வலிமை குன்றுமாறு
செய்து பின் அவனுக்கு அருள்கள் பல செய்த மூவிலை வேலையுடைய
மூர்த்தியாவார்.
|