பக்கம் எண் :

582திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


457. குண்டுந் தேருங் கூறைக ளைந்துங்

கூப்பிலர் செப்பில ராகி

மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு

மிண்டு செயாது விரும்பும்

தண்டும் பாம்பும் வெண்டலை சூலந்

தாங்கிய தேவர் தலைவர்

வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை

மல்குபெ ருந்துறை யாரே. 10

458. கடையார் மாட நன்கெழு வீதிக்

கழுமல வூரன் கலந்து

நடையா ரின்சொல் ஞானசம் பந்தன்

நல்லபெ ருந்துறை மேய

__________________________________________________

10. பொ-ரை: இறைவரைக் குண்டர்களாகிய சமணர்களும் தேரர்களாகிய புத்தர்களும் தம் ஆடைகளைக் களைந்தும் பல்வகை விரதங்களை மேற்கொண்டும் கைகூப்பி வணங்காதவர்களாய்த் திருப்பெயர்களைக் கூறாதவர்களாய், வம்பு செய்யும் இயல்பினராய் வீண்தவம் புரிகின்றனர். அவர்களின் மாறான செய்கைகளைக் கண்டு அவற்றை மேற்கொள்ளாது சிவநெறியை விரும்புமின். யோக தண்டம், பாம்பு, தலைமாலை, சூலம் ஆகியவற்றை ஏந்திய தேவர் தலைவராகிய நம் இறைவர், வண்டுகளும், தேனும் நிறைந்து வாழும் பொழில்களும், சோலைகளும் நிறைந்த பேணுபெருந்துறையில் உள்ளார்.

கு-ரை: புத்தர் சமணர் பொய்யுரை கண்டு புந்தி மயங்காது போற்றுங்கள் என அறிவிக்கின்றது. குண்டு - குண்டர். தேர் - தேரர் கூப்பிலர் - வணங்காதவர்களாய். செப்பிலர் - தோத்திரியர்தவர்கள் ஆகி. மிண்டர் - வம்பர். மிண்டு - குறும்பு.

11. பொ-ரை: வாயில்களையுடைய மாட வீடுகள் நன்கமைந்து வீதிகளையுடைய கழுமலம் என்னும் ஊரில் தோன்றியவனும், அன்பொடு கலந்து இன்சொல் நடையோடு பாடுபவனுமாகிய ஞானசம்பந்தன் நல்ல பேணுபெருந்துறை மேவிய வலிய சூலப்படையுடைய இறைவன் திருவடிகளைப் பரவிப் போற்றிய இப்பதிகப் பாடல்கள்