உறையூர்ப் புராணம்
பால்மணக்குஞ் செவ்வாயுந் தேன்மணக்கும்
பங்கயப்பூம் பைந்தா ரோடு
நூல்மணக்குந் திருமார்பு மருண்மணக்கு
மிருவிழியு நூறை யோடு
சேல்மணக்கும் வாயற்காழித் திருஞான
சம்பந்தத் தேவ னின்பச்
சால்மணக்கு மலரடியு முள்ளுவாம்
வினையனைத்துந் தள்ளு வாமே.
- மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
மாயூரப் புராணம்
தமரொடு வெள்ள நீந்தத்
தவமுயன் றெழுநா
ளாற்றி
அமர்கொடுங் கணையொன் றுய்த்து
வருந்துமா லவன் போலாது
தமரொடு வெள்ள நீந்த நாவாய்க்கட் டவிழ்த்துத்
தாவா
தாமரொரு பதிகஞ் செவ்வாய் மலர்ந்தவர்க்
கடிமை செய்வாம்.
- தியாகராசப்பக் கவிராயர்.
|