பக்கம் எண் :

 43. திருக்கற்குடி585


460. அங்கமொ ராறுடை வேள்வி

யான வருமறை நான்கும்

பங்கமில் பாடலோ டாடல்

பாணி பயின்ற படிறர்

சங்கம தார்குற மாதர்

தங்கையின் மைந்தர்கள் தாவிக்

கங்குலின் மாமதி பற்றுங்

கற்குடி மாமலை யாரே. 2

461. நீரக லந்தரு சென்னி

நீடிய மத்தமும் வைத்துத்

தாரகை யின்னொளி சூழ்ந்த

தண்மதி சூடிய சைவர்

__________________________________________________

வாழும் கற்குடி மாமலையாரே" என்ற தொடர் கடவுள் என்ற சொல்லின் பொருளை விளக்குதல் காண்க. கடவுள் என்ற சொல் வேறாய் உடனாய் இருந்து அருள் செய்தலை உணர்த்துவது. கட - கடந்தது. வேறாய் என்பதை உணர்த்துவது. உள் - ஒன்றாய் என்பதை உணர்த்துவது. கடவு என்று பார்க்கும்போது உடனாயிருந்து இயக்குவதைக் காணலாம்.

2. பொ-ரை: சங்கு வளையல்கள் அணிந்த குறப் பெண்களின் கைகளில் விளங்கும் பிள்ளைகள் இரவு நேரத்தில் தாவிப்பெரிய மதியைக் கைகளால் பற்றும் திருக்கற்குடி மாமலை இறைவர் வேள்வி கட்குரிய விதிகளை விளக்கி ஆறு அங்கங்களுடன் கூடிய, அரிய வேதங்கள் நான்காகிய குற்றமற்ற பாடல், ஆடல், தாளச் சதிகள் ஆகியவற்றைப் பழகியவர்.

கு-ரை: வேதம் பாடியும் படிறர் இவர் என்கின்றது. வேள்வியான அருமறை - யாகவிதிகளை விளக்கும் வேதம். பாணி - கை. ஈண்டு தாளத்தை உணர்த்தியது. படிறர் - பொய்யர். சங்கம் - சங்கு வளையல். கங்குல் - வானம். குறமாதர் கையிலுள்ள பிள்ளைகள் எட்டி மாமதியைப் பற்றுகின்றனர் என்று கற்குடி மலையின் உயரமும் கவினும் உரைத்தவாறு.

3. பொ-ரை: போர் செய்தற்கு ஏற்ற அகலமான மார்பினைக் கொண்டுள்ள வேடர்கள் காடுகளிலிருந்து வெட்டிக் கொணர்ந்து