பக்கம் எண் :

586திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


போரக லந்தரு வேடர்

புனத்திடை யிட்ட விறகில்

காரகி லின்புகை விம்முங்

கற்குடி மாமலை யாரே. 3

462. ஒருங்களி நீயிறை வாவென்

றும்பர்க ளோல மிடக்கண்

டிருங்கள மார விடத்தை

யின்னமு துண்ணிய ஈசர்

மருங்களி யார்பிடி வாயில்

வாழ்வெதி ரின்முளை வாரிக்

கருங்களி யானை கொடுக்குங்

கற்குடி மாமலை யாரே. 4

__________________________________________________

எரிக்கும் விறகுகளில் கரிய அகிலின் புகை மணம் வீசும் திருக்கற்குடி மாமலை இறைவர் பரந்து விரிந்து வந்த கங்கை நீரை உடைய முடி மீது நீண்டு மலர்ந்த ஊமத்தை மலரை அணிந்து விண்மீன்களின் ஒளி சூழ்ந்து விளங்கும் குளிர்ந்த பிறை மதியைச் சூடிய சைவராவர். அம்மலையில் மரமானவை அகிலன்றிப் பிறிதில்லை என்பதாம்.

கு-ரை: கங்கை வைத்த திருமுடிக்கண் மத்தமும் மதியமும் சூடியிருக்கிற சைவர் இவர் என்கின்றது. அகலந்தரும் - பரந்த. தாரகை - நட்சத்திரம். திருமுடிக்கண் வைத்த அப்பிராகிருதமதிக்குத் தாரகைகள் சூழ்தல் இல்லையாயினும் மதி என்ற பொதுமை பற்றியருளிய அடைமொழி. போர் அகலம் தரு வேடர் - பொருதற்கு ஏற்ற மார்பினையுடைய வேடர்கள். வேடர்கள் அகிற்காட்டைக் கொளுத்திப் புனம் செப்பனிடுகின்றார்கள் என்பதாம்.

4. பொ-ரை: மதம் கொண்ட கரிய களிறு அருகில் அன்பு காட்டி வரும் பெண் யானையின் வாயில், பசுமையோடு முளைத்து வரும் மூங்கில் முளைகளை வாரிக்கொடுத்து ஊட்டும் திருக்கற்குடி மாமலை இறைவர், தேவர்கள் பெருமானே, அனைவரையும் ஒருங்கு காத்தளிப்பாயாக என ஓலமிடுதைக் கேட்டுப் பாற்கடலிடை எழுந்த நஞ்சைத் தமது மிடறு கருமைக்கு இடமாகுமாறு இனிய அமுதாகக் கருதி உண்டு காத்த ஈசராவார்.