466. வாளமர் வீர நினைந்த
விராவணன் மாமலை யின்கீழ்த்
தோளமர் வன்றலை குன்றத்
தொல்விர லூன்று துணைவர்
தாளமர் வேய்தலை பற்றித்
தாழ்கரி விட்ட விசைபோய்க்
காளம தார்முகில் கீறுங்
கற்குடி மாமலை யாரே. 8
__________________________________________________
கானகத்தில் வேடர்கள் தினைப்பயிர்
விளைக்கும் திருக்கற்குடி மாமலை இறைவர் மானை இடக்
கையிலும், மழுவை வலக் கையிலும் தரித்தவர். ஊன்
பொருந்திய தலையோட்டை உண்கலனாக உகந்தவர்.
கு-ரை: மானையும் மழுவையும் ஏந்தி,
கபாலத்தை உண்கலமாக உகந்தவர் இவர் என்கின்றது.
சந்து - சந்தனம். வேடர் சந்தன மரத்தின்
நடுவில் தினைவித்தி விளைக்கின்றார்கள் என்பது.
ஆன்மாக்கள் வினைப்போகம் தடையாய் இருப்பினும்
அவற்றை நீக்கிச் சிவபோகத்தை வித்தி
விளைக்கும் புண்ணியபூமி எனக் குறிப்பித்தவாறு.
8. பொ-ரை: அடிமரத்தோடு கூடிய மூங்கிலினது
தழையைப் பற்றி வளைத்து உண்ட களிறு, அதனை வேகமாக
விடுதலால் அம்மூங்கில், விசையோடு சென்று, கரிய நிறம்
பொருந்திய மேகங்களைக் கீறும், திருக்கற்குடி மாமலை
இறைவர், வாட்போரில் வல்ல தனது பெருவீரத்தை நினைந்த
இராவணனைப் பெருமை பொருந்திய கயிலை மலையின்கீழ்
அவன் தோள்களும், வலிய தலைகளும் நெரியுமாறு தமது
பழம்புகழ் வாய்ந்த கால் விரலால் ஊன்றிய துணைவராவார்.
கு-ரை: இராவணனை விரல் ஊன்றி அடக்கியவர்
இவர் என்கின்றது. வேய் - மூங்கில், தாள் - அடி. கரி
- யானை. காளம் - கருமைநிறம். யானை மூங்கிலினது
நுனியைப் பற்றிவிட்ட விசையால் கருமுகிலின் வய்று
கீறப்படும் மலை என்றது; திருவருள் துணையிருப்பின்
ஆணவமான படலத்தையும் கீறிக் கருணைமழையைக் காணலாம்
எனக் குறிப்பித்தவாறு.
|