பக்கம் எண் :

590திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


467. தண்டமர் தாமரை யானுந்

தாவியிம் மண்ணை யளந்து

கொண்டவ னும்மறி வொண்ணாக்

கொள்கையர் வெள்விடையூர்வர்

வண்டிசை யாயின பாட

நீடிய வார்பொழில் நீழல்

கண்டமர் மாமயி லாடுங்

கற்குடி மாமலை யாரே. 9

468. மூத்துவ ராடையி னாரும்

மூசு கடுப்பொடி யாரும்

நாத்துவர் பொய்ம்மொழி யார்கள்

நயமில ராமதி வைத்தார்

ஏத்துயர் பத்தர்கள் சித்தர்

இறைஞ்ச வவரிட ரெல்லாம்

காத்தவர் காமரு சோலைக்

கற்குடி மாமலை யாரே. 10

__________________________________________________

9. பொ-ரை: வண்டுகள் இசை பாட, நீண்ட பொழிலின் நீழலைக் கண்டு மகிழும் சிறந்த மயில்கள் ஆடும் திருக்கற்குடி மாமலை இறைவர் குளிர்ந்த தாமரை மலர்மேல் உறையும் நான்முகனாலும் உயர்ந்த இவ்வுலகை அளந்து திருமாலாலும் அறிய ஒண்ணாத இயல்பினர். வெண்ணிறமான விடையை ஊர்ந்து வருபவர்.

கு-ரை: அயனும் மாலும் அறியவொண்ணாதார் இவர் என்கின்றது. வார் பொழில் - நீண்ட சோலை. பொழிலின் நீழலில் வண்டு பாடக்கண்டு மயிலாடும் கற்குடி என்றது திருவடி நிழலில் திளைத்திருக்கும் சிவயோகியர் பரநாத இன்னிசை கேட்டு ஆனந்தக்கூத்தாடுகின்ற இடம் என அறிவித்தவாறு.

10. பொ-ரை: காவியாடையணிந்த புத்தர்களும், கடுக்காய்ப் பொடியை நிரம்ப உண்ணும் சமணர்களும், நாவிற்கு வெறுப்பை உண்டாக்கும் பொய்ம்மொழி பேசுபவராய் நேயமற்ற அறிவுடையவராய் இருப்போராவர். அவர்களை விடுத்துத் தம்மை ஏத்தி வாழ்த்தி உயரும் பக்தர்களும், சித்தர்களும் வணங்க அவர்கட்கு வரும்