பக்கம் எண் :

 44. திருப்பாச்சிலாச்சிராமம்591


469. காமரு வார்பொழில் சூழுங்

கற்குடி மாமலை யாரை

நாமரு வண்புகழ்க் காழி

நலந்திகழ் ஞானசம் பந்தன்

பாமரு செந்தமிழ் மாலை

பத்திவை பாடவல் லார்கள்

பூமலி வானவ ரோடும்

பொன்னுல கிற்பொலி வாரே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

இடர்களை அகற்றிக் காத்தவர், அழகிய சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடி மாமலை இறைவர்.

கு-ரை: சமணரும் புத்தரும் அறியமுடியாத பிறை சூடிய பெருமான் என்கிறது. மூதுவர் ஆடை - முதிர்ந்த காவியாடை. கடு - கடுக்காய்த்துவர். நா துவர் பொய்ம்மொழி - நாக்கிற்குத் துவர்ப்பை உண்டுபண்ணும் பொய்.

11. பொ-ரை: அழகிய நீண்ட பொழில்களால் சூழப்பட்ட திருக்கற்குடி மாமலை இறைவரை, நாவிற் பொருந்திய வண்புகழால் போற்றப்பெறும் சீகாழிப் பதியில் தோன்றிய நன்மையமைந்த ஞானசம்பந்தன் பாடிய செந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்கள். பொலிவுடன் கூடிய தேவர்களோடும் பொன்னுலகின்கண் பொலிவோராவர்.

கு-ரை: இத்தலத்திறைவனை ஏத்தவல்லவர்கள் தேவராய்த் திகழ்வர் என்கின்றது. காமரு - அழகிய. நாமரு - நாவிற் பொருந்திய.

ஆளுடைய பிள்ளயார் திருவந்தாதி

வாழ்த்துவ தெம்பர மேயாகும் அந்தத்து வையமுந்நீர்
ஆழ்த்திய காலத்தும் ஆழா ததுஅரன் சேவடியே
ஏத்திய ஞானசம் பந்தற் கிடம்இசைத் தும்பிகொம்பர்க்
காத்திகழ் கேதகம் போதகம் ஈனுங் கழுமலமே.

- நம்பியாண்டார்நம்பி.