பக்கம் எண் :

 44. திருப்பாச்சிலாச்சிராமம்593


பண் : தக்கராகம்

பதிக எண்: 44

திருச்சிற்றம்பலம்

470. துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச்

சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்

பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ

வாரிடமும் பலிதேர்வர்

அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி

லாச்சிரா மத்துறைகின்ற

மணிவளர்கண்டரோ மங்கையைவாட

மயல்செய்வதோ விவர்மாண்பே. 1

471. கலைபுனைமானுரி தோலுடையாடை

கனல்சுட ராலிவர்கண்கள்

தலையணிசென்னியர் தாரணிமார்பர்

தம்மடிகள் ளிவரென்ன

__________________________________________________

1. பொ-ரை: முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லி மழவன் மகளாகிய இப் பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?

கு-ரை: தவறிழைத்த தண்மதியைத் தலையிற்சூடி விடத்தை அமுதுசெய்த பெருமானோ இவள்வாட மயக்குவது என்கின்றார். துணி - கீறு. பணி வளர்கொள் கையர் - பாம்புகள் வளர்வதைக் கொள்ளுகின்ற திருக்கரங்களையுடையவர். பாரிடம் - பூதம். ஆரிடமும் - ஏற்பார் ஏலாதார் என்கின்ற வேறுபாடில்லாமல் எல்லாரிடமும். மங்கை என்றது கொல்லிமழவனது மகளை.

2. பொ-ரை: மான்தோலை இடையில் ஆடையாகப் புனைந்து, கனல், ஞாயிறு, திங்கள் ஆகியன கண்களாக விளங்கத் தலையோடு அணிந்த முடியினராய், மாலை அணிந்த மார்பினராய், உயிர்கட்குத்