பக்கம் எண் :

594திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


அலைபுனல்பூம்பொழில் சூழ்ந்தமர்பாச்சி

லாச்சிரா மத்துறைகின்ற

இலைபுனைவேலரோ வேழையைவாட

விடர்செய்வதோ விவரீடே. 2

472. வெஞ்சுடராடுவர் துஞ்சிருண்மாலை

வேண்டுவர்பூண்பது வெண்ணூல்

நஞ்சடைகண்டர் நெஞ்சிடமாக

நண்ணுவர் நம்மைநயந்து

மஞ்சடைமாளிகை சூழ்தருபாச்சி

லாச்சிரா மத்துறைகின்ற

செஞ்சுடர்வண்ணரோ பைந்தொடிவாடச்

சிதைசெய்வதோ விவர்சீரே. 3

_________________________________________________

தலைவரிவர் என்று சொல்லத் தக்கவராய், நீர்வளம் நிரம்பிய பொழில்கள் சூழ்ந்த பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற இலை வடிவமான வேலை ஏந்திய இறைவர், இம்மழவன் மகளை வாடுமாறு இடர்செய்தல் இவர் பெருமைக்குப் பொருந்துவதாமோ?

கு-ரை: இறைவனது கலை, ஆடை, கண் முதலியன இவை என உணர்த்தி, இவற்றையுடைய இவரோ இவளை இடர் செய்வது என்று வினாவுகின்றது. மானுரி புனைகலை. தோலுடை ஆடை, கனல்சுடர் இவர்கண்கள் என இயைக்க. கலை - மேலாடை. உடை ஆடை - உடுத்தலையுடைய ஆடை. இலை புனை வேலர் - இலைவடிவாகப் புனையப்பெற்ற வேலினையுடையவர். ஏழை - பெண்.

3. பொ-ரை: உலகமெல்லாம் அழிந்தொழியும் ஊழிக் காலத்து இருளில் கொடிய தீயில் நடனம் ஆடுபவரும், தலைமாலை முதலியவற்றை விரும்புபவரும், வெண்ணூல் பூண்பவரும், நஞ்சுடைய கண்டத்தவரும், அன்போடு தம்மை நினைத்த நம்மை விரும்பி நம் நெஞ்சை இடமாகக் கொண்டு எழுந்தருள்பவரும், மேகங்கள் தோயும் மாளிகைகள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து எழுந்தருளிய செந்தீவண்ணரும் ஆகிய சிவபெருமான் பைந்தொடி அணிந்த மழவன் மகளாகிய இப்பெண்ணை வருத்துவது இவர் புகழுக்குப் பொருந்துவதோ?