பக்கம் எண் :

596திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


474. மாந்தர்தம்பானறு நெய்மகிழ்ந்தாடி

வளர்சடை மேற்புனல்வைத்து

மோந்தைமுழாக்குழல் தாளமொர்வீணை

முதிரவோர் வாய்மூரிபாடி

ஆந்தைவிழிச்சிறு பூதத்தர்பாச்சி

லாச்சிரா மத்துறைகின்ற

சாந்தணிமார்பரோ தையலைவாடச்

சதுர்செய்வதோ விவர்சார்வே. 5

475. நீறுமெய்பூசி நிறைசடைதாழ

நெற்றிக்கண் ணாலுற்றுநோக்கி

ஆறதுசூடி யாடரவாட்டி

யைவிரற் கோவணவாடை

பாறருமேனியர் பூதத்தர்பாச்சி

லாச்சிரா மத்துறைகின்ற

ஏறதுவேறிய ரேழையைவாட

விடர்செய்வதோ விவரீடே. 6

__________________________________________________

5. பொ-ரை: மண்ணுலகில் அடியவர்கள் ஆட்டும் பால் நறுநெய் ஆகியவற்றை விரும்பியாடி. வளர்ந்த சடைமுடிமேல் கங்கையைச் சூடி, மொந்தை, முழா, குழல், தாளம், வீணை ஆகியனமுழங்க வாய்மூரி பாடி ஆந்தை போன்ற விழிகளையுடைய சிறு பூதங்கள் சூழ்ந்தவராய்த் திருப்பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற சந்தனக் கலவையை அணிந்த மார்பினையுடைய சிவபிரான் இத்தையலை வாடும்படி செய்து இப்பெண்ணிடம் தம் சதுரப்பாட்டைக் காட்டல் ஏற்புடையதோ?

கு-ரை: அடியார்கள் ஆட்டும் பால், நெய் முதலானவற்றில் ஆடிக் கங்கையைச் சடைமேல்வைத்து மொந்தை முதலான வாத்தியங்கள் முழங்கப்பாடும் பூதகணநாதர் இவர் என்கின்றது. மோந்தை மொந்தை என்பதன் நீட்டல்விகாரம்.முதிர - ஒலிக்க.ஒருமாதைத் தலையில் வைத்த இவரோ இம்மாது வாடச் சதுர்செய்வது என நயந்தோன்ற உரைத்தவாறு.

6. பொ-ரை: திருநீற்றை உடல் முழுதும் பூசியவராய், நிறைந்த சடைகள் தாழ்ந்து விளங்க, தமது நெற்றி விழியால் மறக்கருணை