பக்கம் எண் :

 44. திருப்பாச்சிலாச்சிராமம்597


476. பொங்கிளநாகமொ ரேகவடத்தோ

டாமைவெண் ணூல்புனைகொன்றை

கொங்கிளமாலை புனைந்தழகாய

குழகர்கொ லாமிவரென்ன

அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி

லாச்சிரா மத்துறைகின்ற

சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச்

சதிர்செய்வதோ விவர்சார்வே. 7

__________________________________________________

காட்டிப் பாவம் போக்கி, கங்கையைத் தலையில் அணிந்து, ஆடுகின்ற பாம்பைக் கையில் எடுத்து விளையாடிக்கொண்டு, ஐவிரல் அளவுள்ள கோவண ஆடை அணிந்து, பால் போன்ற வெள்ளிய மேனியராய், பூத கணங்கள் தம்மைச் சூழ்ந்தவராய்த் திருபாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற விடை ஊர்தியராகிய சிவபிரான் இப்பெண்ணை வாடுமாறு செய்து இவளுக்கு இடர் செய்வது பெருமை தருவது ஒன்றா?

கு-ரை: அருளும் மறமும் உடையவர் இவர் என அறிவிக்கின்றது. நெற்றிக்கண்ணால் உற்றுநோக்கி என்றது மறக்கருணை காட்டிச் சம்ஹரித்தலைச் சொல்லியது.

ஐவிரல் கோவணம் என்பது கோவணத்தினகலம் கூறியது. ஏழை - பெண். ஈடு - பெருமை.

7. பொ-ரை: சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையானபூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருந்தப்படுவதோ?

கு-ரை: நாகம், ஆமையோடு, பூணூல், கொன்றைமாலை புனைந்தவர் இவர் என்கின்றது.

ஏகவடம் - ஒற்றைமாலை. குழகர் - இளமையுடையவர். சதிர் - சாமர்த்தியம். இளமங்கையைப் பக்கத்தில் உடைய இவர் இவ்வாறு சதிர்செய்தல் ஆகாது என்பது குறிப்பு.