பக்கம் எண் :

 45. திருவாலங்காடு599


479. நாணொடுகூடிய சாயினரேனு

நகுவ ரவரிருபோதும்

ஊணொடுகூடிய வுட்குநகையா

லுரைக ளவைகொளவேண்டா

ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி

லாச்சிரா மத்துறைகின்ற

பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப்

புனைசெய்வதோ விவர்பொற்பே. 10

__________________________________________________

அழலுருவாய் நின்றவரும், பெரிய முழுமதியை ஆலமரங்கள் சென்று தோயும் பொழில்கள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் பால் வண்ணருமாகிய சிவபிரான் இப்பைந்தொடியாள் வாடுமாறு வஞ்சித்தல் இவர் பண்புக்கு ஏற்ற செயல் ஆகுமோ?

கு-ரை: அயனும் திருமாலும் மேலும் கீழும் அறியாதபடி மயங்கச்செய்த பெருமான் இவர் என்கின்றது.

10. பொ-ரை: நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச் சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ள வேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச் செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?

கு-ரை: புறச்சமயிகள் புல்லுரை கொள்ளவேண்டா என உலகவர்க்கு அறிவுறுத்திப், பின்னர் ஆணோடு பெண்வடிவானவர் இவர் என்கின்றது.

நாணொடு கூடிய - நாணத்தோடு சேர்ந்த பிறவற்றையும். சாயினரேனும் - இழந்தவர்களாயினும். நகுவர் - பரிகசிக்கத் தக்கவர்கள், ஆதலால் இருவேளை உண்ணுகின்ற அவருடைய அஞ்சத்தக்க சிரிப்பால் அவர்களைக் கொள்ள வேண்டா என முதல் இரண்டடிகட்கும் பொழிப்புரை காண்க. பெண்ணொருபாதியான பெருமான் ஒரு பெண்ணை வாடச் செய்யார் என்பது குறிப்பு.