பக்கம் எண் :

62முதல் திருமுறையின் உரைத்திறம்(முதல் திருமுறை)


காதே, அதுதான் ஆன்ம இயல்பு என்று திருவுள்ளம்கொண்டு அருள்செய்யும் கருணையாளன் எழுந்தருளியுள்ள ஆரூரை நினைக்க வேண்டும் என்றும், நினைத்தால் ஆகாமிய சஞ்சித வினைகள் கழியும் என்றும் ஒன்பதாம் பாடல் உரைக்கிறது.

அதிகார பலத்தால் துள்ளுவாரையும் ஆட்கொள்ளும் இறைவன், ஏனைய விஷத்தன்மை பொருந்திய ஆன்மாக்களையும் அடக்கி ஆளுவன் என்ற கருணையின் மேன்மையைப் பத்தாம்பாடல் பகர்கிறது.

முத்தியாகுமே என முதற்பாட்டில் அருளிய பிள்ளையார் அதற்கு இடையூறான பிறவி வினை பாசம் இவைகளையும், இவைகளை நீக்கும் உபாயங்களையும் நீங்கியவர் எய்தும் பயனையும் முறையே கூறினார். இத்தகைய பாடல்கள் பத்தையும் பயில்வாரும் அத்தகைய இன்பத்தை எய்துபவர்; பேரார்; நிலையாவர் எனத் திருக்கடைக்காப்புத் தெரிவிக்கிறது.

கீழ்ப்பாடல்களுள் ஆரூரை மலர்தூவ அடையும் பயனை ஐந்து பாடல்களும் தொழுவார் எய்தும் பயனைஇரண்டு பாடல்களும், வாழ்த்துவர் எய்தும் பயனை இரண்டு பாடல்களும், இப்பதிகம் ஓதுதற் பயனை ஒருபாடலும் உணர்த்துகின்றன.

ஆ) 126 - திருத்தாளச்சதி - முதலியனவும் காண்க.

இங்ஙனம் இவ்வுரையாளர் பாடற் கருத்து உரைத்த பாடல்கள் பலஉள.

4. சொற்களும் சொற்றொடர்களும் இருபொருள் தருதல்:

1-1. ஏடுடையமலரான் - இதழ்களைஉடைய தாமரை மலரில் உள்ள பிரமன். இதழ்களை உடைய தாமரை மலர்களால்.

1-10. இறைகாணிய - பிரமனும், திருமாலும் தம்முள் யாவர் இறைவர் என்பதனைக் காணும்பொருட்டு. இறைவனைக் காணும் பொருட்டு.

2-6. கழலின் ஓசை, சிலம்பின் ஓசை - ஆண்பகுதியாகிய வலத்தாள் கழலின் ஓசை. பெண் பகுதியாகிய இடத்தாள் சிலம்பின்