பக்கம் எண் :

 முதல் திருமுறையின் உரைத்திறம்63


ஓசை. சிவபெருமான் கழலின் ஓசை. மகா காளியின் சிலம்பின் ஓசை.

2-10. செய்தவத்தர் - தவத்தைச் செய்யும் அடியார்கள். செய்த + அவத்தர் - தவம் என்று வீண் காரியம் விளைக்கும் தேரர்.

26-10. ஆறும் நான்கும் அமர்ந்தார் - வேதாங்கங்கள் ஆறினையும் வேதம் நான்கினையும் விரும்பியவர். ஆறாறாக அடுக்கப்பட்டு வருகின்ற அகம், அகப்புறம், புறம், புறப்புறம் ஆகிய சமயங்களின் பொருளாய் அமர்ந்திருப்பவர்.

26-11. சேடர் - எல்லாம் தத்தம் காரணத்துள் ஒடுங்க அவை தமக்குள் ஒடுங்கத் தாம் ஒன்றினும் ஒடுங்காது, ஒடுங்கியவைகள் மீட்டும் உதிக்க மிச்சமாய் இருப்பவர். பெருமை உடையவர் என்பதும் ஆம்.

36-3. கொக்கின் இறகு - கொக்கிறகம்பூ. கொக்கின் இறகும் ஆம்.

44-4. தூமதி - ஒருகலைப் பிறையாதலின் களங்கம் இல்லாத மதி. இறைவன் அணிந்தமையின் தூமதி எனலுமாம்.

50-4. மெய்யராகிப் பொய்யைநீக்கி - மெய்யராகி எனவே பொய்யை நீக்கி என்பது பெறப்படவும் மீட்டும் கூறியது வற்புறுத்த. தத்துவஞான உணர்ச்சி உடையவராய்ப் பொய்யறிவை விடுத்து என்றுமாம்.

51-1. ஈர் உரிவை - கிழிக்கப் பெற்ற தோல், உதிரப்பசுமை கெடாத ஈரமாகிய தோல் என்பதும் ஆம்.

73-3. எரியிடைமூன்றினர் - நெருப்பில் சத்தமும் ஸ்பரிசமும் உருவமுமாகிய மூன்று தன்மாத்திரைகளாய் இருப்பவர். ஆகவனீயம் முதலிய முத்தீயாய் இருப்பவர் என்றுமாம்.

73-3. மண்ணிடை ஐந்தினர் - மண்ணில் சத்தம், ஸ்பரிசம், உருவம், இரதம், கந்தம் என்ற ஐந்து தன்மாத்திரைகளாய் இருப்பவர். முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐந்திணைகளாய் இருப்பவர் எனலுமாம்.

82-5. பெண்ணுக்கு அருள் செய்த பெருமான் - மன்மதனை