எரியவிழித்து, பின் இரதிக்கு
அருள் செய்த பெருமான். (69-3) உமையம்மைக்கு இடப்பாகத்தை
அருளிய பெருமான் எனலுமாம்.
84-5. சேண் நின்றவர் - சேய்மையில்
உள்ள அடியார்கள்; தேவரும் ஆம்.
91. திருஇருக்குக்குறள் - வீடு காதலிப்பவரால்
விரும்பப்படும் இரண்டு சீர்களால் யாக்கப்பெற்ற
இருக்கு மந்திரம் போன்றபாடல். வேதங்களுள்
இருக்கு மந்திர வடிவமாக உள்ளது. அதுபோல இப்பதிகமும்
மந்திர வடிவாக உள்ளது எனலுமாம். மந்திரம்
சொற்சுருக்கமுடையது. எண்ணுவார் எண்ணத்தை
ஈடேற்றவல்லது. அதுபோல இப்பதிகமும் அமைந்திருக்கிறது
என்பதும் ஆம்.
73-7. தேவார் சோலை - தேவு + ஆர் +
சோலை = தெய்வத்தன்மை பொருந்திய சோலை. தே
+ வார் + சோலை = தேன் நிறைந்த சோலை.
இவ்வாறு சொற்களுக்கும்
சொற்றொடர்களுக்கும்
இருபொருள் செய்யும் திறத்தை இத்திருமுறை உரையில்
பல இடங்களிலும் காணலாம்.
5. சுட்டு என்ற உள்ளுறை:
இயற்கை வருணனை முதலிய பகுதிகளில் நேரிடையான
பொருளோடு உள்ளுறைப் பொருளும் விளக்குவதனை இவ்வுரையாசிரியர்
பல இடங்களிலும் பின்பற்றியுள்ளார்.
அ) 14 ஆம் பதிகம்:
பாடல் 1; கூனல் பிறை மழைமேகம்
கிழித்தோடிச் சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம்.
ஆன்மாக்கள் அநாதியான ஆணவ மலபடலத்தைக் கிழித்துச்
சென்றெய்தி எம்பெருமான் திருவடி நிழலாகிய தண்ணிய
இடத்தைச் சென்று சாரலாம் என்பது உள்ளுறை.
பாடல் 2; மயில்புல்குதண் பெடையோடு
உடன் ஆடும் வளர்சாரல் குயிலின் இசைபாடும் குளிர்
சோலைக் கொடுங்குன்றம். தன்வசம் அற்றுப்
பாடியும் ஆடியும் செல்லும் அன்பர்க்குக் குளிர் நிழல்
தருவது கொடுங்குன்றம் என்பது உள்ளுறை.
பாடல் 4; ‘கரியோடு அரி இழியும்’,
அருவிக் கொடுங்குன்றம்.
|