516. நீறடைந்த மேனியின்க
ணேரிழை யாளொருபால்
கூறடைந்த கொள்கையன்றிக்
கோல வளர்சடைமேல்
ஆறடைந்த திங்கள்சூடி
யரவம ணிந்ததென்னே
சேறடைந்த தண்கழனிச்
சேய்ஞலூர் மேயவனே. 2
517. ஊனடைந்த வெண்டலையி
னோடுப லிதிரிந்து
கானடைந்த பேய்களோடு
பூதங்க லந்துடனே
கு-ரை: பலநூல் கற்றும் மயக்கந்தெளியாமையாலே
வந்து கேட்ட சனகாதியர் நால்வர்க்கும் உபதேசப்பொருளை
உரைத்த தென்னே என வினாவியதாக அமைந்தது இப்பாடலும்
பிறவும். நூல் - வேதாகம முதலிய நூற்பிரமாணங்கள்.
மால் - மயக்கம். நால்வர் - சனகாதியர் நால்வர்.
அரு மறை - அரிய அநுபூதி நிலையாகிய இரகசியத்தை.
2. பொ-ரை: சேறு மிகுந்த குளிர்ந்த
வயல்களால் சூழப்பட்ட திருச்சேய்ஞலூரில் எழுந்தருளிய
இறைவனே! திருநீறணிந்த தன் திருமேனியின்கண்
உமையம்மை ஒருபால் விளங்க அழகியதாய் நீண்டு வளர்ந்த
சடைமேல் கங்கையையும் தன்னைச் சரணாக அடைந்த திங்களையும்
சூடிப் பாம்பையும் அணிந்துள்ள காரணம் யாதோ?
கு-ரை: ஒருபாகமாக உமையைக் கொண்டிருத்தலே
யன்றிக் கங்கை முதலியவற்றையும் அணிந்ததென்னே
என்கின்றது. கோலம் - அழகு. பெண்ணொருபாதியராக
இருந்தும், மற்றொரு பெண்ணாகிய கங்கையையும், காமத்தாற்
கலைகுறைந்த மதியையும், போகியாகிய பாம்பையும்
அணிதல் ஆகுமா என வினாவியதன் நயம் ஓர்க.
3. பொ-ரை: வண்டுகள் நிறைந்த சோலைகள்
செறிந்த திருச்சேய்ஞலூரில் எழுந்தருளிய இறைவனே!
ஊன்பொருந்திய வெண்மையான தலையோட்டைக் கையில்
ஏந்தி, உண் பலிக்குத் திரிந்து காட்டில்
|