பக்கம் எண் :

628திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


மானடைந்த நோக்கிகாண

மகிழ்ந்தெரி யாடலென்னே

தேனடைந்த சோலைமல்கு

சேய்ஞலூர் மேயவனே. 3

518. வீணடைந்த மும்மதிலும்

வின்மலை யாவரவின்

நாணடைந்த வெஞ்சரத்தா

னல்லெரி யூட்டலென்னே

பாணடைந்த வண்டுபாடும்

பைம்பொழில் சூழ்ந்தழகார்

சேணடைந்த மாடமல்கு

சேய்ஞலூர் மேயவனே. 4

வாழும் பேய்களோடு பூதகணங்களும் கலந்து சூழ, மான் போன்ற கண்ணை உடைய உமையம்மை காண மகிழ்வோடு இடுகாட்டில் எரியாடுவது ஏன்?

கு-ரை: பலியேற்று, பேயும் பூதங்களும் புடைசூழ, மலையரசன் மகள் காண எரியாடுதல் ஏன் எனவினவுவதை விளக்குகிறது. கான் - காடு. மான் அடைந்த நோக்கி - மான் பார்வையைக் கற்றுக் கொள்வதற்காக வந்தடைந்த நோக்கினையுடையாளாகிய உமாதேவி.

4. பொ-ரை: பண்ணிசையோடு வண்டுகள் பாடும் பசுமையான பொழில் சூழ்ந்ததும், அழகியதாய் உயர்ந்த மாட வீடுகள் நிறைந்ததுமான திருச்சேய்ஞலூரில் எழுந்தருளிய இறைவனே! மும்மதில்களும் வீணடையுமாறு மலையை வில்லாகவும் அரவை அவ்வில்லின் நாணாகவும் கொண்டு கொடிய அம்பால் பெரிய எரியை அம்முப்புரங்களுக்கு ஊட்டியது ஏன்?

கு-ரை: மலை வில்லாக, பாம்பு நாணாகக் கொண்டு முப்புரத்தைத் தீவைத்தது என்னே எனவினாவுகிறது இத்திருப்பாடல். வீண் அடைந்த - பயனற்றுப்போன, நல்லெரி என்றது பூத எரிபோலாது, புண்ணியப் பொருளாகிய சிவபெருமானுடைய சிரிப்பினின்றெழுந்த சிவாக்கினி என்பதைக் குறிப்பித்தது. பாண் - பாட்டு. சேண் - ஆகாயம்.