பக்கம் எண் :

 48. திருச்சேய்ஞலூர்629


519. பேயடைந்த காடிடமாப்

பேணுவ தன்றியும்போய்

வேயடைந்த தோளியஞ்ச

வேழமுரி த்ததென்னே

வாயடைந்த நான்மறையா

றங்கமோ டைவேள்வித்

தீயடைந்த செங்கையாளர்

சேய்ஞலூர் மேயவனே. 5

520. காடடைந்த வேனமொன்றின்

காரண மாகிவந்து

வேடடைந்த வேடனாகி

விசயனொ டெய்ததென்னே

5. பொ-ரை: வாயினால் ஓதப்பெற்ற நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் கற்று, ஐவகை வேள்விகளை இயற்றி, தரப் பொருந்திய சிவந்த கையினராய் விளங்கும் அந்தணர் வாழும் சேய்ஞலூர் மேயவனே! சுடுகாட்டை இடமாகக் கொண்டு ஆடி உகப்பதோடு அன்றியும் சென்று மூங்கில் போன்ற தோளினை உடைய உமையம்மை அஞ்ச யானையை உரித்தது ஏனோ?

கு-ரை: சுடுகாட்டையிடமாகக் கொண்டு ஆடுதலே யன்றி அம்மை யஞ்ச ஆனை உரித்ததென்னே என்கின்றது. பேணுவது - விரும்பியமர்வது. வேய் அடைந்த தோளி - மூங்கிலையொத்த தோள்களையுடைய உமையம்மை. வாயடைந்த - ஓதப்பெறுகின்ற; உண்மை செறிந்த என்றுமாம். ஐவேள்வி - தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்ற ஐவருக்கும் செய்யப்பெறும் வேள்வி. தீ அடைந்த செங்கையாளர் - தரப்பொருந்திய வலக்கரத்தையுடைய அந்தணர்கள்.

6. பொ-ரை: கோடுகளோடு கூடிய பெரிய யானைப் படைகளை உடைய கோச்செங்கட் சோழனுக்கு அருள் செய்தவனும், பெருமை பொருந்திய செல்வர்கள் வாழும் திருச்சேய்ஞலூரில் மேவியவனுமாகிய இறைவனே! வில்லடிபட்டுக் காட்டுள் சென்று பதுங்கிய பன்றி ஒன்றின் காரணமாக, தான் வேடன் உருத்தாங்கி வந்து அருச்சுனனோடு போர் புரிந்தது ஏனோ?