பக்கம் எண் :

636திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


528. ஆன்முறையா லாற்றவெண்ணீ

றாடி யணியிழையோர்

பான்முறையால் வைத்தபாதம்

பத்தர் பணிந்தேத்த

மான்மறியும் வெண்மழுவுஞ்

சூலமும் பற்றியகை

நான்மறையான் நம்பெருமான்

மேயது நள்ளாறே. 3

529. புல்கவல்ல வார்சடைமேற்

பூம்புனல் பெய்தயலே

மல்கவல்ல கொன்றைமாலை

மதியோ டுடன்சூடிப்

பல்கவல்ல தொண்டர்தம்பொற்

பாதநி ழற்சேர

நல்கவல்ல நம்பெருமான்

மேயது நள்ளாறே. 4

_________________________________________________

ஏடு உடைய மேலுலகு - ஒன்றின்மேல் ஒன்றாக எடுத்தலையுடைய மேலுலகங்கள். இவ்விரண்டடிகளாலும் இறைவனுடைய தனியரசிற்கு உரிய நாட்டுப்பரப்பு சொல்லப்பட்டது.

3. பொ-ரை: பசுவிடமிருந்து முறையாக எடுக்கப்பட்ட திரு வெண்ணீற்றை மேனி முழுதும் பூசி அழகிய அணிகலன்களைப் புனைந்த உமையம்மையை ஒரு பாகமாக வைத்துள்ள, தன் திருவடிகளைப் பக்தர்கள் பணிந்து போற்ற, இளமான், வெண்மையான மழு, சூலம் ஆகியவற்றை ஏந்திய கையினனாய் நான்மறைகளையும் அருளிய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

கு-ரை: ஆன் முறையால் - பசுவினிடமிருந்து விதிப்படி எடுக்கப்பட்ட, ஆற்ற ஆடி எனக் கூட்டுக. ஆற்ற - மிக. அணியிழை உமாதேவியார்.

4. பொ-ரை: பொருந்திய நீண்ட சடையின் மேல் கங்கையை அணிந்து, அதன் அருகில் கொன்றை மாலையையும் பிறைமதியையும் ஒருசேரச் சூடித் தன்னைச் சார்ந்து வாழும் தொண்டர்கட்குத் தனது