530. ஏறுதாங்கி யூர்திபேணி
யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர்
ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த
மார்பினில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான்
மேயது நள்ளாறே. 5
531. திங்களுச்சி மேல்விளங்குந்
தேவன் இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவன்
என்றடி யேயிறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந்
தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான்
மேயது நள்ளாறே. 6
__________________________________________________
திருவடி நிழலைச் சேரும் பேற்றை
நல்கும் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
கு-ரை: புல்கவல்ல - தழுவவல்ல, மல்க -
நிறைய. பல்க - இறுக. இது அடியார்களுக்குத் திருவடி
நிழலைத் தருகின்றார் என்று பயன் கூறுகின்றது.
5. பொ-ரை: ஆன்ஏற்றைக்
கொடியாகத் தாங்கியும் அதனையே ஊர்தியாக
விரும்பி ஏற்றும் அழகிய இளம்பிறை கங்கை ஆகியன
பொருந்திய சடைமுடியின்மேல் ஆடும் பாம்பைச்
சூடியும் திருநீறு பூசிப் பூணூலோடு விளங்கும்
மார்பில் கொன்றை மாலையின் மணம் கொண்டவனுமான
நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
கு-ரை: ஏறுதாங்கி - கொடியின்கண்
இடபத்தைத் தாங்கி. ஊர்தி பேணி -
இடபவாகனத்தின்மீது ஆரோகணித்து. ஏர் - அழகு.
நிரைகொன்றை - ஒழுங்கான கொன்றை. நாறு - மணம்.
6. பொ-ரை: திங்கள்
திருமுடியின் உச்சி மீது விளங்கும் தேவனாய்,
தேவர்கள் எங்கள் உச்சியா ய் உள்ள எம்
பெருமானே!
|