பக்கம் எண் :

638திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


531. திங்களுச்சி மேல்விளங்குந்

தேவன் இமையோர்கள்

எங்களுச்சி யெம்மிறைவன்

என்றடி யேயிறைஞ்சத்

தங்களுச்சி யால்வணங்குந்

தன்னடி யார்கட்கெல்லாம்

நங்களுச்சி நம்பெருமான்

மேயது நள்ளாறே. 6

533. சிட்டமார்ந்த மும்மதிலுஞ்

சிலைவரைத் தீயம்பினால்

சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ

றாடுவ தன்றியும்போய்ப்

__________________________________________________

என்று அடிபரவவும், தலையால் தன்னை வணங்கும் அடியவர்களும் எங்கள் முடிமீது விளங்கும் நம் பெருமான் என்று போற்றவும் விளங்கும் சிவபிரான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

கு-ரை: உச்சி - தலை. எங்கள் உச்சியின்மேல் இருக்கின்றார் எம்மிறைவன் என்று தேவர்கள் வணங்க, தலைவணங்கும் அடியார்களும் நமது உச்சியிலுள்ளான் (எனக்கூற இருக்கும்) நம் பெருமான் மேயது நள்ளாறு என இயைத்துப் பொருள் காண்க.

7. பொ-ரை: கொடிய ஒளி பொருந்திய நெருப்பைக் கையில் ஏந்தி விண்ணளவும் ஒலிக்கும் முழவு முழங்கப் பலரும் அஞ்சும் சுடுகாட்டில் ஆடல் பாடலுடன் ஓர் இளம்பிறையைச் சூடி, விளங்கும் கண்டத்தில் நஞ்சினை நிறுத்திய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

கு-ரை: விண் கொள் முழவு - மேகத்தை யொத்த முழவம்; அல்லது ஆகாயத்தின் தன்மையாகிய சப்தத்தைக் கொண்டிருக்கின்ற முழவுமாம். அஞ்சிடம் - அஞ்சத்தக்க இடமாகிய மயானம்.

8. பொ-ரை: பெருமை மிக்க முப்புரங்களையும் வரை சிலையில் பொருந்திய தீயாகிய அம்பினால் சுட்டு அழித்து, திருவெண்ணீற்றுப் பொடியில் திளைத்து ஆடி, பட்டம் என்னும் அணிகலன் கட்டிய