பட்டமார்ந்த சென்னிமேலோர்
பான்ம தியஞ்சூடி
நட்டமாடும் நம்பெருமான்
மேயது நள்ளாறே. 8
534. உண்ணலாகா நஞ்சுகண்டத்
துண்டுடனே யொடுக்கி
அண்ணலாகா வண்ணல்நீழல்
ஆரழல் போலுருவம்
எண்ணலாகா வுள்வினையென்
றெள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான்
மேயது நள்ளாறே. 9
__________________________________________________
சென்னியின் மேல் பால் போலும்
நிறமுடையதொரு பிறைமதியைச் சூடி நடனம் ஆடும்
நம்பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
கு-ரை: சிட்டம் - பெருமை. மாட்டி -
மாளச் செய்து. தீயில் விறகை மாட்டி என்ற
வழக்குண்மையும் அறிக. பட்டம் - நெற்றியில்
அணியும் அணி.
9. பொ-ரை: யாராலும்
உண்ணமுடியாத நஞ்சினை உண்டு. அதனைத் தம்
கண்டத்தில் நிறுத்தியவரும், யாராலும் அணுக இயலாத
தலைவரும் ஒளி பொருந்திய அழல் போன்ற
திருவுருவினரும் அநாதியாகவே உள்ள வினையால் எண்ண
இயலவில்லையே என மனம் வருந்திய திருமால்
பிரமர்களால் நணுக முடியாதவருமான நம் பெருமான்
மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
கு-ரை: உண்ணலாகா நஞ்சு - எந்தத்
தேவராலும் உண்ண முடியாத விஷம். ஒடுக்கி - அதன்
வலியைக் கெடுத்து.
அண்ணலாகா - அணுகமுடியாத. உள் வினை
எண்ணலாகா என்று எள்க வலித்து இருவர் நண்ணலாகா
நம்பெருமான் - அநாதியே பற்றியுள்ள வினையால்
உள்ளபடியே உணரமாட்டாது இகழ, வருந்தி அயனாலும்
மாலாலும் அணுகமுடியாத பெருமான்.
|