பக்கம் எண் :

640திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


535. மாசுமெய்யர் மண்டைத் தேரர்

குண்டர்கு ணமிலிகள்

பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி

யந்நெறி செல்லன்மின்

மூசுவண்டார் கொன்றைசூடி

மும்மதிளும் முடனே

நாசஞ்செய்த நம்பெருமான்

மேயது நள்ளாறே. 10

536. தண்புனலும் வெண்பிறையுந்

தாங்கிய தாழ்சடையன்

நண்புநல்லார் மல்குகாழி

ஞானசம் பந்தன்நல்ல

பண்புநள்ளா றேத்துபாடல்

பத்தும் இவைவல்லார்

உண்புநரங்கி வானவரோ

டுலகில் உறைவாரே. 11

----------------------------------------------------------

திருச்சிற்றம்பலம்

10. பொ-ரை: அழுக்கேறிய உடலினராகிய சமணரும், கையில் மண்டை என்னும் உண்கலத்தை ஏந்தித் திரியும் புத்தர்களும் ஆகிய குண்டர்களும் நற்குணம் இல்லாதவர்கள். அவர்கள் பேசும் பேச்சை மெய்யென்று எண்ணி அவர்கள் சமயங்களைச் சாராதீரர். வண்டுகள் மொய்த்துப் பொருந்தும் கொன்றை மலர் மாலையைச் சூடி மும்மதில்களையும் ஒருசேர அழித்துத் தேவர்களைக் காத்தருளிய நம் பெருமான் மேவிய திருநள்ளாற்றைச் சென்று வழிபடுமின்.

கு-ரை: புறச்சமயிகள் என்செய்வார்களென, அவர்கட்காக இரங்குகின்றது. பொதியிலான் - பொதியமலையைத் தனக்கு இடமாகக் கொண்டவன். பொதியிலும், திருப்பூவணமும், கயிலையும், அன்பர் உள்ளமும் அவன் உறையுமிடங்கள் என அறிவிக்கப்படுகின்றது.

11. பொ-ரை: நட்புக்கு ஏற்ற நல்லோர் வாழும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், குளிர்ந்த கங்கையையும் வெண்மையான பிறையையும் தாங்கிய தாழ்ந்த சடைமுடியை உடைய சிவபிரான்