பக்கம் எண் :

 50. திருவலிவலம்641


எழுந்தருளிய, நல்லியல்பு வாய்ந்தோர் வாழும் திருநள்ளாற்றைப் போற்றிப் பாடிய இத்திருப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் பிராரத்த கன்ம வலிமை குறையப் பெற்று வானவர்களோடு தேவருலகில் வாழ்வர்.

கு-ரை: இப்பாடல் பத்தும் வல்லார் இறைவனோடு ஒன்றி இருப்பார் என்கின்றது. பொன்னி நாடன் - காவிரிநாட்டிற் பிறந்தவன். மன்னுசோதி - நிலைபெற்ற சோதி வடிவானவன்.

திருத்தொண்டர் புராணம்

திருஞானசம்பந்தர் புராணம்

உருகியஅன் புறுகாதல் உள்ளுருகி நனைஈரம்

பெற்றாற் போல

மருவுதிரு மேனிஎலாம் முகிழ்த்தெழுந்த மயிர்ப்புளகம்

வளர்க்கு நீராய்

அருவிசொரி திருநயனத் தானந்த வெள்ளம்இழிந்

தலைய நின்று

பொருவில்பதி கம்போக மார்த்தபூண் முலையாள்என்

றெடுத்துப் போற்றி.

யாணரம்பில் ஆரஇயல் இசைகூடப் பாடியே

எண்ணில் கற்பச்

சேணளவு படஓங்குந் திருக்கடைக்காப் புச்சாத்திச்

செங்கண் நாகப்

பூணகலத் தவர்பாதம் போற்றிசைத்துப் புறத்தணைந்து

புவனம் ஏத்தும்

பாணனார் யாழிலிடப் பாலறா வாயர்அருள்

பணித்த போது.

- சேக்கிழார்.