50. திருவலிவலம்
பதிக வரலாறு:
திருவாரூர்ப்
புற்றிடங்கொண்டபெருமானைச் சேவித்துச் சிலநாள்
தங்கியிருந்த திருஞானசம்பந்தப் பிள்ளையார்
வளமிகுந்த வலிவலத்தை அடைந்தார்கள்.
மனத்துணைநாதரை வணங்கி இப்பதிகத்தை அருளிச்
செய்தார்கள். இது எந்த யாத்திரையில் என்பது
அறியக்கூடவில்லை.
பண்: பழந்தக்கராகம்
பதிக எண்: 50
திருச்சிற்றம்பலம்
536. தண்புனலும் வெண்பிறையுந்
தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி
ஞானசம் பந்தன்நல்ல
பண்புநள்ளா றேத்துபாடல்
பத்தும் இவைவல்லார்
உண்புநரங்கி வானவரோ
டுலகில் உறைவாரே. 11
__________________________________________________
1. பொ-ரை: திருவலிவலம் மேவிய
இறைவனே! பரபரப்பு அடங்கி, மனம் ஒன்றி, வஞ்சம்
வெஞ்சொல் தவிர்ந்து தூய்மையோடு, காமம் முதலிய
குற்றங்களைக் கடிந்து, நல்ல முறையில் உன்
நாமமாகிய திருவைந்தெழுத்தை என் வல்லமைக்குத்
தக்கவாறு நான் ஓதி வழிபடுகின்றேன், வந்து
அருள்புரிவாயாக.
கு-ரை: வலிவலம் மேயவனே! மனம்
ஒன்றி, வஞ்சம் நீங்கி இனிய கூறி, காமமாதிகடிந்து,
உனதுநாமத்தைச் சொல்ல, தேவரீர் வந்து அருள
வேண்டும் என்கின்றது. ஒல்லை - வேகம். அதாவது
பரபரப்பு. கள்ளம் -
வஞ்சனை. வெய்ய சொல் - கொடுஞ்சொல்.
தூய்மை செய்து - மனத்தைப் பண்படுத்தி. நாமம் -
திருவைந்தெழுத்து. வல்லவாறு - அடியேனுடைய தகுதி ஏற்க
வல்லவாறு. இறைவற்கு வல்லவாறு என்னு உரைப்பாரும்
உளர்.
|