540. மெய்யராகிப் பொய்யைநீக்கி
வேதனையைத் துறந்து
செய்யரானார் சிந்தையானே
தேவர்குலக் கொழுந்தே
நைவனாயே னுன்றனாமம்
நாளும்நவிற் றுகின்றேன்
வையமுன்னே வந்துநல்காய்
வலிவலமே யவனே. 4
__________________________________________________
கண்டு உன் திருநாமம் சொல்வதொன்றே இன்பமாவது
என்பதைக் கண்டு அதனை ஓத உள்ளம் விரும்புகிறது.
அருள் புரிவாயாக.
கு-ரை: பெண்டிர் முதலாகிய பாசப்
பெருங்கடலில் பற்றி, விட்டுப் பிரிய கில்லாது
வருந்துகின்றேன்: உனது நாமத்தைச் சொல்ல உளம்
விழைகின்றது என அறிவிக்கின்றார்.
பேதைப் பெருங்கடல் - அறியாமைக் கடல். விண்டு -
பிரிந்து. கண்டு கண்டு - இவை துன்பம் உன்நாமம்
சொல்வது இன்பம் எனப் பலகாலுங்கண்டு
4. பொ-ரை: பொய்மையை விலக்கி,
உண்மையை மேற்கொண்டு பந்த பாசங்களாகிய
வேதனைகளைத் துறந்து செம்மையான மனமுடையோராய்
வாழும் அன்பர்களின் சிந்தையுள் இருப்பவனே,
தேவர்களின் குலக்கொழுந்தே! நான் வருந்தி
நிற்கிறேன். உன்றன் திருநாமத்தை நாள்தோறும்
ஓதி வருகிறேன். வலிவலம் மேவிய இறைவனே.
வையகத்தே பலரும் காண வந்து அருள்புரிவாயாக.
கு-ரை: செம்மனச் செல்வர்
சிந்தையுள் இருப்பவனே! அடியேன் அவலத்தால்
நைகின்றேன்: வந்து அருள் செய் என்கின்றது.
மெய்யராகி எனவே பொய்யை நீக்கி என்பது
பெறப்படவும் மரட்டுங் கூறியது வற்புறுத்த. அல்லது
மெய்யராகி - தத்துவஞான உணர்ச்சி உடையராய்.
பொய்யை நீக்கி என்றுமாம்.
வேதனை - ஆசைபற்றி எழும் துன்பம்.
செய்யர் - செம்மையான அடியார்கள். நைவன் -
வருந்துவேன். வையம் - முன்னே வந்து நல்காய் -
இவ்வுலகத்து என்போலியரும் அறிந்துய்யவேண்டி
மானைக் காட்டி மானைப் பிடிப்பார்போல் வந்து
அருள் செய்வாய்.
|