541. துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ்
சொல்லுவனுன் றிறமே
தஞ்சமில்லாத் தேவர்வந்துன்
றாளிணைக்கரழ்ப் பணிய
நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ
நாளும்நினைந் தடியேன்
வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன்
வலிவலமே யவனே. 5
542. புரிசடையாய் புண்ணியனே
நண்ணலார்மூ வெயிலும்
எரியவெய்தா யெம்பெருமா
னென்றிமையோர் பரவும்
கரியுரியாய் காலகாலா
நீலமணி மிடற்று
வரியரவா வந்துநல்காய்
வலிவலமே யவனே. 6
__________________________________________________
5. பொ-ரை: திருவலிவலம் மேவிய
இறைவனே, உறங்கும்போதும் உண்ணும்போதும் உன்றன்
புகழையே சொல்லுவேன். தேவர்கள் வேறு புகலிடம்
இல்லாது உன்பால் வந்து உன் தாளிணைகளின் கீழ்ப்
பணிய அவர்களைக் காத்தற்பொருட்டு நஞ்சை உண்ட
உன் கருணையை நாளும் நினைதலையன்றி வேறு என் செய
வல்லேன்? உன் அருள் பெறுதற்குத் தடையாக என்பால்
வஞ்சம் உண்டென்று அஞ்சுகின்றேன். அதனைப்
போக்கி எனக்கு அருள்.
கு-ரை: உறங்கும்போதும்
உண்ணும்போதும் உன்புகழே பேசுகின்றேன்: என்னிடம்
வஞ்சம் இருப்பதால் ஏற்பாயோ மாட்டாயோ என
அஞ்சுகின்றேன் என்கின்றது. துஞ்சும்போதும் -
தூங்கும்போதும். துற்றும்போதும் - உண்ணும்போதும்.
தஞ்சம் - அடைக்கலத்தானாம்.
6. பொ-ரை: திருவலிவலம் மேவிய
இறைவனே, முறுகிய சடையை உடையவனே, புண்ணிய வடிவினனே!
பகைவர் தம் முப்புரங்களும் எரியுமாறு அம்பெய்தவனே
என்று தேவர்கள்பரவும், யானையின் தோலை
அணிந்தவனே, காலனுக்குக் காலனே! நீலமணி
|