543. தாயும்நீயே தந்தைநரயே
சங்கரனே யடியேன்
ஆயும்நின்பா லன்புசெய்வா
னாதரிக்கின் றதுள்ளம்
ஆயமாய காயந்தன்னு
ளைவர்நின்றொன் றலொட்டார்
மாயமேயென் றஞ்சுகின்றேன்
வலிவலமே யவனே. 7
544. நீரொடுங்குஞ் செஞ்சடையாய்
நின்னுடையபொன் மலையை
வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற
வேந்தனிரா வணனைத்
__________________________________________________
போலும் கண்டத்தையும் வரிந்து கட்டப்
பெற்ற பாம்பினையும் உடையவனே! என்பால் வந்து
அருள்புரிவாயாக.
கு-ரை: புண்ணியனே! காலகாலா!
நீலகண்டா! வந்து அருள் செய் என்கின்றது.
நண்ணலார் - பகைவர். வரி அரவு - வரிந்து
கட்டப்பட்ட பாம்பு.
7. பொ-ரை: திருவலிவலம் மேவிய
இறைவனே! சங்கரனே எனக்குத் தாயும் தந்தையும்
நீயேயாவாய். அடியேன் உள்ளம் சிவஞானிகளால்
ஆய்ந்துணரப்படும் நின்பால் அன்பு செய்ய
விரும்புகின்றது. எனக்குப் படைத்தளிக்கப்பட்ட
இவ்வுடலிடைப் பொருந்திய ஐம்பொறிகள் உன்னைப்
பொருந்தவொட்டாமல் தடுக்கின்றன.
இம்மாயத்தைக் கண்டு யான் அஞ்சுகின்றேன்.
அருள்புரிவாயாக.
கு-ரை: சுற்றமும் மற்றெல்லாமும்
நீயே என்கின்றது. ஆயும் - சிவஞானம் கைவரப்பெற்ற
ஆன்மாவினால் ஆராயப்படுகின்ற. ஆயம் ஆய -
படைக்கப்பெற்ற. ஐவர் - பஞ்சேந்திரியங்கள்
ஒன்றல் ஒட்டார் - நின்னோடு பொருந்தவிடார்.
8. பொ-ரை: திருவலிவலம் மேவிய
இறைவனே தருக்கி வந்த கங்கை செயல் இழந்து
ஒடுங்கிய செஞ்சடையை உடையவனே, உன்னுடைய
பொன்மயமான கயிலை மலையை வேரோடும் பிடுங்கி
ஏந்தத்
|