பக்கம் எண் :

 50. திருவலிவலம்647


தேரொடும்போய் வீழ்ந்தலறத்

திருவிரலா லடர்த்த

வாரொடுங்குங் கொங்கைபங்கா

வலிவலமே யவனே. 8

545. ஆதியாய நான்முகனும்

மாலுமறி வரிய

சோதியானே நீதியில்லேன்

சொல்லுவனின் றிறமே

ஓதிநாளு முன்னையேத்து

மென்னைவினை யவலம்

வாதியாமே வந்துநல்காய்

வலிவலமே யவனே. 9

__________________________________________________

தொடங்கிய இலங்கை வேந்தன் இராவணனைத் தேரோடும் வீழ்ந்து அலறுமாறு உன் கால் திருவிரலால் அடர்த்தவனே, கச்சு அணிந்த பெருத்த தனங்களை உடைய உமைபங்கனே! வந்து நல்காய்.

கு-ரை: ஆணவத்தால் மிஞ்சிய இராவணனையும் அடக்கி ஆட்கொண்ட அம்மையப்பா! அடியேனை ஆட்கொள்ளவேண்டும் என்கின்றது. நீர் ஒடுங்கும் - தருக்கிவந்த கங்கைதன் வலி ஒடுங்கும். பொன்மலை - அழகிய கயிலைமலை. பீழ்ந்து - பிடுங்கி. வார் ஒடுங்கும் - கச்சு தன்வலியழியும்.

9. பொ-ரை: திருவலிவலம் மேவிய இறைவனே! உலகங்களைப் படைத்துக் காத்தலில் ஆதியானவர்களாகிய நான்முகனும், திருமாலும் அறிதற்கரிய சோதிப் பிழம்பாய்த் தோன்றியவனே! யான் நீதியில்லாதேன் ஆயினும் உன் புகழையே சொல்லுகின்றேன். நாள்தோறும் உன்புகழையே ஓதி உன்னையே ஏத்தும் என்னை வினைகளும் அவற்றின் பயனாய துன்பங்களும் வந்து தாக்காமல் வந்து அருள் புரிவாயாக.

கு-ரை: இடைவிடாது உன்னையே தோத்திரிக்கின்றேன். ஆதலால் அடியேனை அவலவினைகள் அடையாவண்ணம் அருள் செய்க என்கின்றது. வினை அவலம் - வினையும் அதனால்வரும் துன்பமும். வாதியாமே - துன்புறுத்தாதபடி.