546. பொதியிலானே பூவணத்தாய்
பொன்றிகழுங் கயிலைப்
பதியிலானே பத்தர்சித்தம்
பற்றுவிடா தவனே
விதியிலாதார் வெஞ்சமணர்
சாக்கியரென் றிவர்கள்
மதியிலாதா ரென்செய்வாரோ
வலிவலமே யவனே. 10
547. வன்னிகொன்றை மத்தஞ்சூடும்
வலிவலமே யவனைப்
பொன்னிநாடன் புகலிவேந்தன்
ஞானசம்பந்தன் சொன்ன
பன்னுபாடல் பத்தும்வல்லார்
மெய்த்தவத்தோர் விரும்பும்
மன்னுசோதி யீசனோடே
மன்னியிருப் பாரே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
10. பொ-ரை: திருவலிவலம் மேவிய
இறைவனே, பொதிய மலையைத் தனக்கு இடமாகக்
கொண்டவனே, திருப்பூவணம் என்னும் தலத்தில்
உறைபவனே, தன்பால் பக்தி செய்யும் அன்பர்களின்
சித்தங்களில் எழுந்தருளி இருப்பவனே, கொடிய
சமணர்களும் சாக்கியர்களும் உன்னை அடையும்
புண்ணியம் இல்லாதவர்கள். அறிவற்ற அவர்கள்
தங்கள் சமய நெறியில் என்ன பயனைக்
காண்பார்களோ?
கு-ரை: புறச்சமயிகள்
என்செய்வார்களென, அவர்கட்காக இரங்குகின்றது.
பொதியிலான் - பொதியமலையைத் தனக்கு இடமாகக்
கொண்டவன். பொதியிலும், திருப்பூவணமும்,
கயிலையும், அன்பர் உள்ளமும் அவன் உறையுமிடங்கள்
என அறிவிக்கப்படுகின்றன.
11. பொ-ரை: வன்னி கொன்றை
மலர், ஊமத்தை மலர் ஆகியவற்றைச் சூடும்
திருவலிவலம் மேவிய இறைவனைக் காவிரி நாட்டிலுள்ள
புகலி என்னும் சரகாழிப் பதிக்கு வேந்தனாய
ஞானசம்பந்தர்
|