விளத்தொட்டிப் புராணம்
மருங்கலை யுடுத்த காழி
வாவியொண்
கரைமே னின்று
பெருங்கலை சிறிதுந் தேராப் பித்தனை
யழுத ழைத்தாங்
கருங்கலை யனைத்தும் பெற்ற வாண்டகை
யடியே நெஞ்சக்
கருங்கலை யுருக்கி யாட்கொள் கவுணியன் மலர்த்தாள் போற்றி.
- மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
கோயிலூர்ப் புராணம்
அருமறை யேச மென்ற
தமையுமென் றுணர்த்தல் போல
வொருமறை யவன்மால் சுட்டி யுணர்தரா வொன்றைச்சுட்டித்
திருமறை யவனுங் காணச் சிறந்ததொரு விரலாற் காட்டும்
பெருமறை முழங்குங் காழிப் பிள்ளைதாள் சென்னி சேர்ப்பாம்.
- மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
ஒழுவிலொடுக்கம்
வேதாக மப்பவுரி வீசுங்
களாசநிலை
யாதார வெற்பி லபிடேகம் - போதத்
திருளிலெழு பாநு வெனதொழிவி லின்பக்
கருணைபொழி வானெடுத்த கை.
- கண்ணுடைய வள்ளலார்.
|