549. விடையமர்ந்து வெண்மழுவொன்
றேந்திவிரிந் திலங்கு
சடையொடுங்கத் தண்புனலைத்
தாங்கியதென் னைகொலாம்
கடையுயர்ந்த மும்மதிலுங்
காய்ந்தனலுள் ளழுந்தத்
தொடைநெகிழ்ந்த வெஞ்சிலையாய்
சோபுரமே யவனே. 2
550. தீயராய வல்லரக்கர்
செந்தழலுள் ளழுந்தச்
சாயவெய்து வானவரைத்
தாங்கியதென் னைகொலாம்
பாயும்வெள்ளை யேற்றையேறிப்
பாய்புலித்தோலுடுத்த
தூயவெள்ளை நீற்றினானே
சோபுரமே யவனே. 3
__________________________________________________
2. பொ-ரை: வாயில்களாற்
சிறந்த முப்புரங்களும் அனலுள் அழுந்துமாறு
சினத்தோடு அம்பு செலுத்திய கொடிய மலை வில்லை
உடையவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! விடைமரது
அமர்ந்து வெண்மையான மழு ஒன்றைக் கையில் ஏந்தி
விரிந்து விளங்கும் சடையின்கண் ஒடுங்குமாறு
குளிர்ந்த நீரைத் தடுத்துத் தாங்கி இருத்தற்குக்
காரணம் என்னையோ?
கு-ரை: முப்புரம் எரியக் கணை
தொடுத்த வில்லையுடைய இறைவா, விடையேறி,
வெண்மழுவேந்தி, சடையில் கங்கையைத் தாங்கியது
என்னையோ என்கின்றது. விடை - இடபம். வெண் மழு
என்றது இறைவன் திருக்கரத்திலுள்ள மழு அலங்காரப்
பொருளாதலன்றி யாரையும் அழித்தல்
இல்லையாதலின். தொடை - அம்பு. நெகிழ்ந்த -
செலுத்திய.
3. பொ-ரை: பாய்ந்து செல்லும்
வெண்ணிறமான விடையேற்றின் மரது ஏறி, பாயும்
புலியினது தோலை உடுத்துத் தூய வெண்ணீற்றை
அணிந்துள்ளவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே!
கொடியவர்களாகிய வலிய அரக்கர் சிவந்த அழலுள்
அழுந்துமாறு கணை எய்து
|