பக்கம் எண் :

652திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


551. பல்லிலோடு கையிலேந்திப்

பல்கடையும் பலிதேர்ந்

தல்லல்வாழ்க்கை மேலதான

வாதரவென் னைகொலாம்

வில்லைவென்ற நுண்புருவ

வேனெடுங்கண் ணியொடும்

தொல்லையூழி யாகிநின்றாய்

சோபுரமே யவனே. 4

552. நாற்றமிக்க கொன்றைதுன்று

செஞ்சடைமேன் மதியம்

ஏற்றமாக வைத்துகந்த
காரணமென் னைகொலாம்

தேவர்களை வாழ்வித்தது என்ன காரணம் பற்றியோ?

கு-ரை: இடபத்திலே ஏறி, புலித்தோல் உடுத்த புண்ணியனே! அரக்கரையழித்து, வானவரை வாழ்வித்தது என்னையோ என்கின்றது இறைமைக்குணம் வேண்டுதல் வேண்டாமை இலவாய் இருக்க, சிலரை அழித்து, சிலரை வாழ்விப்பது பொருந்துமோ என்பார்க்குக் காரணம் அருள்வதுபோல, தீயராய வல்லரக்கர் என்று திரிபுராதிகள் தீமைதோன்றக் கூறினார். வானவர் என அடைமொழி இன்றிக் கூறியதும் இரங்கத்தக்கார் என்னும் குறிப்புப்பற்றி.

4. பொ-ரை: வில்லை வென்ற வளைந்த நுண்புருவத்தையும், வேல் போன்ற நீண்ட கண்ணையும் உடைய உமையம்மையோடும், பழமையான பல ஊழிக்காலங்களாக நிற்பவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! பல் இல்லாத மண்டை யோட்டைக் கையிலேந்திப் பலர்இல்லங்களுக்கும் சென்று பலி ஏற்கும் அல்லல் பொருந்திய வாழ்க்கையின்மேல் நீ ஆதரவு காட்டுதற்குக் காரணம் என்னவோ?

கு-ரை: வேல்நெடுங்கண்ணியோடு ஊழி ஊழியாக இருக்கின்ற நீ பிச்சைவாழ்க்கையை விரும்பியது என்னையோ என்கின்றது. பல் இல் ஓடு - பற்கள் உதிர்ந்து போன மண்டையோடு. கடை - கடை வாயில். அல்லல் வாழ்க்கை - துன்பவாழ்வு.

5. பொ-ரை: வலிமை பொருந்திய காலனை அழியுமாறு உதைத்தருளி, எல்லாப் பொருள்கட்கும் தோற்றமும் ஈறுமாகி நிற்பவனே!