ஊற்றமிக்க காலன் றன்னை
யொல்கவுதைத் தருளி
தோற்றமீறு மாகிநின்றாய்
சோபுரமே யவனே. 5
553. கொன்னவின்ற மூவிலைவேற்
கூர்மழுவாட் படையன்
பொன்னைவென்ற கொன்றைமாலை
சூடும்பொற்பென் னைகொலம்
அன்னமன்ன மென்னடையாள்
பாகமமர்ந் தரைசேர்
துன்னவண்ண ஆடையினாய்
சோபுரமே யவனே. 6
__________________________________________________
திருச்சோபுரம் மேவிய இறைவனே! மணம்
மிக்க கொன்றை மலர்கள் நிறைந்த
செஞ்சடையின்மேல் பிறைமதியை அழகு பெற வைத்து
மகிழ்தற்குக் காரணம் என்னையோ?
கு-ரை: காலனை உதைத்து உலகத்திற்குத்
தோற்றமும் ஈறுமாக இருக்கின்ற தேவரீர், கொன்றை
நிறைந்த செஞ்சடைமேல் மதியும் வைத்தது ஏன்
என்கின்றது. ஏற்றம் - உயர்வு. உகந்த - மகிழ்ந்த.
மகிழ்ச்சிக்குக் காரணம் பலர் சாபத்தால்
இளைத்த ஒருவனுக்கு ஏற்றம் அளித்தோமே என்ற
மகிழ்ச்சி. ஊற்றம் - வலிமை. தோற்றம் ஈறுமாகி
நின்றாய் என்றது, தான் எல்லாவற்றிற்கும்
தோற்றமும் ஈறுமாய்ஆவதன்றித் தனக்குத்
தோற்றமும் ஈறும் இல்லாதவன் என்பது குறிப்பு.
இதனையே மணிவாசகரும் "ஆதியனே அந்தம் நடுவாகி
அல்லானே" என்பார்கள்.
6. பொ-ரை: அன்னம் போன்ற
மெல்லிய நடையினையுடைய உமையம்மையை ஒரு பாகமாகப்
பொருந்தி, இடையில் அழகிய கோவண ஆடையை
அணிந்தவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே!
கொல்லும் தொழில் பொருந்திய மூவிலை வேலையும்
தூய மழுவாட் படையையும் உடையவனே! நிறத்தால்
பொன்னை வென்ற கொன்றை மாலையை நீ விரும்பிச்
சூடுதற்குரிய காரணம் என்னையோ?
கு-ரை: ஒரேமேனியில் பெண்பாதியும்
உடையன் ஆதலால்
|