பக்கம் எண் :

654திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


554. குற்றமின்மை யுண்மைநீயென்

றுன்னடியார் பணிவார்

கற்றகேள்வி ஞானமான

காரணமென் னைகொலாம்

வற்றலாமை வாளரவம்

பூண்டயன்வெண் டலையில்

துற்றலான கொள்கையானே

சோபுரமே யவனே. 7

555. விலங்கலொன்று வெஞ்சிலையாக்

கொண்டுவிற லரக்கர்

குலங்கள்வாழு மூரெரித்த

கொள்கையிதென் னைகொலாம்

__________________________________________________

கோவணமும், பட்டாடையும் உடைய பெருமானே, கொன்றை மாலை சூடுவதென்னை என்கின்றது. கொன் - பெருமை. பொற்பு - அழகு துன்ன ஆடையினாய், வண்ண ஆடையினாய் எனத் தனித்தனிப் பிரித்துக்கூட்டிக் கோவணமாகிய ஆடையையுடையவனே. நிறம் பொருந்திய ஆடையையுடையவனே என உமையொரு பாதியானாய் இருப்பதற்கேற்பப் பொருள் உரைக்க.

7. பொ-ரை: ஊன்வற்றிய ஆமை ஓட்டையும், ஒளி பொருந்திய பாம்பையும் அணிகலனாகப்பூண்டு, பிரமனின் வெண்மையான தலையோட்டில் பலியேற்று உண்ணும் கொள்கையனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! குணமும குற்றமும் நீயே என்று பணியும் உன் அடியவர்கட்குத் தாங்கள் கற்ற கல்வியும், கேள்வியும், அதனால் விளையும் ஞானமுமாக நீயே விளங்குதற்குக் காரணம் என்னவோ?

கு-ரை: பிரமகபாலத்துப் பிச்சை ஏற்பவனே, குணமும் நீ, குற்றமும் நீ என்று பணியும் அடியார்கட்குக் கல்வியும் கேள்வியும் அதனால் விளங்கும் ஞானமுமாகத் தேவரீர் விளங்குவது என்னையோ என்கின்றது. கற்ற கேள்வி - கேள்வி பயன்படுவது கற்றபின்னாதலின் கற்றதன்பின் கேட்கப்படும் கேள்வி எனக் குறித்தமை காண்க. வற்றலாமை - ஆமை ஓடு. துற்றலான - உண்ணுதலாகிய.

8. பொ-ரை: இலங்கையில் நிலைபெற்று வாழும், வாட்போரில் வல்ல அவுணர் தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால்