இலங்கைமன்னு வாளவுணர்
கோனையெழில் விரலால்
துலங்கவூன்றி வைத்துகந்தாய்
சோபுரமே யவனே. 8
556. விடங்கொணாக மால்வரையைச்
சுற்றிவிரி திரைநீர்
கடைந்தநஞ்சை யுண்டுகந்த
காரணமென் னைகொலாம்
இடந்துமண்ணை யுண்டமாலு
மின்மலர்மே லயனும்
தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச்
சோபுரமே யவனே. 9
__________________________________________________
விரலால் நடுங்குமாறு ஊன்றிப் பின்
அவன் வேண்ட மகிழ்ந்து அருள் புரிந்தவனே!
திருச்சோபுரம் மேவிய இறைவனே! மேரு மலையைக்
கொடிதொரு வில்லாகக் கொண்டு வலிமை பொருந்திய
அரக்கர் குலங்கள் வாழ்கின்ற திரிபுரங்களாகிய
ஊார்களை எரித்து அழித்தற்குக் காரணம் என்னவோ?.
கு-ரை: இலங்கை மன்னனை ஒருவிரலால்
அடர்த்த நீ, மலையை வில்லாகத்
தூக்கித்திரிபுரம் எரித்தது என்னையோ
என்கின்றது. விலங்கல் - மேருமலை. அரக்கர் -
திரிபுராதிகள்.
9. பொ-ரை: மண்ணுலகை அகழ்ந்து
உண்டதிருமாலும், இனிய தாமரை மலர்மேல் விளங்கும்
பிரமனும், முற்காலத்தே உன்னைத் தொடர்ந்து அடிமுடி
காணமாட்டாராய் நின்றொழியத்
திருச்சோபுரத்தில் மேவி விளங்கும் இறைவனே!
தேவர்கள் விடத்தையுடைய வாசுகி என்னும் பாம்பை
மந்தரம் என்னும் பெரிய மலையைச் சுறறிக் கட்டி,
விரிந்த அலைகளையுடைய கடல்நரரைக் கடைந்தபோது,
அதனிடை எழுந்த நஞ்சை உண்டு மகிழ்தற்குக் காரணம்
என்னையோ?
கு-ரை: அயனாலும் மாலாலும்
அறியப்படாத நீர் விடம் உண்டு மகிழ்ந்த காரணம்
என்னை என்கின்றது. நாகம் - வாசுகி என்னும் பாம்பு.
மால் வரை - மந்தரமலை. நஞ்சை உண்டு உகந்த -
தேவர்கள் அஞ்சிய நஞ்சைத் தாம் உண்டு
அவர்களைக் காத்தும், சாவாமைக்கு
|