557. புத்தரோடு புன்சமணர்
பொய்யுரையே யுரைத்துப்
பித்தராகக் கண்டுகந்த
பெற்றிமையென் னைகொலாம்
மத்தயானை யீருரிவை
போர்த்துவளர் சடைமேல்
துத்திநாகஞ் சூடினானே
சோபுரமே யவனே. 10
558. சோலைமிக்க தண்வயல்சூழ்
சோபுரமே யவனைச்
சீலமிக்க தொல்புகழார்
சிரபுரக்கோன் நலத்தான்
__________________________________________________
ஏதுவாகிய அமுதத்தை அவர்களுக்குக்
கொடுத்து அளித்தும் மகிழ்ந்த. இடந்து - தோண்டி.
10. பொ-ரை: மதம் பொருந்திய யானையை
உரித்து அதன் தோலைப் போர்த்து, நீண்ட சடையின்
மேல்புள்ளிகளையுடைய நாகப்பாம்பைச்சூடியவனே!
திருச்சோபுரம் மேவிய இறைவனே! புத்தர்களும்,
சமணர்களும் பொய்யுரைகளையே பேசிப் பித்தராகத்
திரிதலைக் கண்டு நீ மகிழ்தற்குக் காரணம்
என்னையோ?
கு-ரை: புத்தரும் சமணரும்
பொய்யுரைத்துப் பித்தராக்கிய தன்மை என்னையோ
என்கின்றது. அவர்களுக்கும் ஞானம் அளித்து
உயர்த்தவேண்டிய தேவரீர், இங்ஙனம் பித்தராகக்
கண்டது அவர்களுக்கு அதற்கேற்ற பரிபாகம்
இன்மையாலே என்று உணர வைத்தவாறு. துத்தி - படம்;
பொறி,
11. பொ-ரை: சோலைகள் மிகுந்ததும்,
குளிர்ந்தவயல்களால்
சூழப்பட்டதுமானதிருச்சோபுரம் மேவிய இறைவனைச்
சீலத்தால் மிக்க, பழமையான புகழை உடைய
அந்தணர்கள் வாழும் சிரபுரம் என்னும் சீகாழிப்
பதியின் தலைவனும் நன்மைகளையே கருதுபவனும்,
உலகில் மேம்பட்ட தண் தமிழ் பாடியவனுமாகிய ஞான
சம்பந்தன் பாடிய அழகுமிக்க இத்தமிழ் மாலையை
ஓதவல்லவர் வானுலகை அடைவர்.
|