பக்கம் எண் :

 52. திருநெடுங்களம்659


560. கனைத்தெழுந்த வெண்டிரைசூழ்

கடலிடைநஞ் சுதன்னைத்

தினைத்தனையா மிடற்றில்வைத்த

திருந்தியதே வநின்னை

மனத்தகத்தோர் பாடலாடல்

பேணியிராப் பகலும்

நினைத்தெழுவா ரிடர்களையாய்

நெடுங்களமே யவனே. 2

561. நின்னடியே வழிபடுவான்

நிமலாநினைக் கருத

என்னடியா னுயிரைவவ்வே

லென்றடற்கூற் றுதைத்த

பொன்னடியே பரவிநாளும்

பூவொடுநீர் சுமக்கும்

நின்னடியா ரிடர்களையாய்

நெடுங்களமே யவனே. 3

__________________________________________________

யோனே எனப் பின்னர்வரும் "குறையுடையார் குற்றம் ஓராய்" என்பதற்கு இயைய அமைந்திருத்தல் காண்க. ஓராய் - ஆராயாதவனே.

2. பொ-ரை: திருநெடுங்களம் மேவிய இறைவனே, ஆரவாரித்து எழுந்த, வெண்மையான அலைகளால் சூழப்பட்ட கடல் நஞ்சினைத் தினையளவாகச் செய்து உண்டு கண்டத்தே நிறுத்திய மேம்பட்ட தேவனே, நின்னை மனத்தகத்தே நிறுவியவர்களின் ஆடல், பாடல்களை விரும்பி, இரவும் பகலும் நின்னையே நினைத்து எழும் அடியவர்களின் இடர்களை நீக்கி அருளுக.

கு-ரை: ஆகாத நஞ்சை அழகிய மிடற்றில் வைத்த பெருமானே! அல்லும் பகலும் தியானிக்கும் அடியார் இடர்களைவாயாக என்கின்றது. கனைத்து - ஒலித்து. தினைத்தனையா - அதன்பெருமை எல்லாவற்றையும் அடக்கித் தினையளவாகச்செய்து. மிடறு - கழுத்து.

3. பொ-ரை: திருநெடுங்களம் மேவிய இறைவனே, குற்ற மற்றவனே, நின் திருவடிகளையே வழிபடும் மார்க்கண்டேயன் நின்னையே கருதிச் சரண் புக அவனைக் கொல்லவந்த வலிமை