563. பாங்கினல்லார் படிமஞ்செய்வார்
பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு
தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந்
தலைவநின்றா ணிழற்கீழ்
நீங்கிநில்லா ரிடர்களையாய்
நெடுங்களமே யவனே. 5
564. விருத்தனாகிப் பாலனாகி
வேதமோர்நான் குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக்
கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய வாதிதேவ
னடியிணையே பரவும்
நிருத்தர்கீத ரிடர்களையாய்
நெடுங்களமே யவனே. 6
__________________________________________________
5. பொ-ரை: திருநெடுங்களம் மேவிய
இறைவனே, குணங்களால் நல்லவர்களும், தவ வேடம்
தாங்கியவர்களும பாரிடை வாழும் மக்களும் பலருடைய
இல்லங்களிலும் பலிதேரும் உனது செயல்களில் மனம்
ஒன்றி நல்லோர் பாடும் பாடல்களோடு தொழத்தக்க
உன் திருவடிகளை வணங்கிக் கரை கடந்த அன்போடு
தலைவனாகிய உனது திருவடிகளை நிழலை நீங்கி
நில்லாதவர்களாகிய அடியவர்களின் இடர் களைக்
களைந்தருள்வாயாக.
கு-ரை: இடையீடின்றியே திருவடிக்கண்
உறைத்து நிற்கும் அன்பர் இடர்களையாய்
என்கின்றது. தலைவ, நெடுங்களமேயவனே, நல்லார்
செய்வார் நல்லார் பாடலொடு அன்பினோடும் நின்
தாள் நிழற்கீழ் நீங்கி நில்லார் இடர்களையாய்
எனக் கூட்டிப் பொருள் காண்க. பாங்கின் -
குணங்களால். படிமம் - தவவேடம். தூங்கி - மனம்
ஒன்றி. தாங்கிநில்லா அன்பினோடும் - தம்மளவில்
பொறுக்கலாற்றாது கரைகடந்துவருகின்ற அன்போடும்.
6. பொ-ரை: திருநெடுங்களம் மேவிய
இறைவனே, மூத்த வேடந்தாங்கியும், இளமை வடிவங்
கொணடு, வேதங்கள் நான்கை
|