பக்கம் எண் :

662திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


565. கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக்

கூட்டியோர்வெங் கணையால்

மாறுகொண்டார் புரமெரித்த

மன்னவனே கொடிமேல்

ஏறுகொண்டாய் சாந்தமீதென்

றெம்பெருமா னணிந்த

நீறுகொண்டா ரிடர்களையாய்

நெடுங்களமே யவனே. 7

__________________________________________________

யும் நன்குணர்ந்த தலைவனாய் கங்கை நங்கையை மணம் கமழும் சடைமிசைக் கரந்துள்ள பெருமானே, கலை ஞானங்கள் மெய்ஞானங்களின் பொருளான முதற்கடவுளாய் உன் அடி இணைகளைப் பரவி ஆடியும் பாடியும் போற்றும் அடியவர்களின இடர்களைப் போக்கி யருள்வாயாக.

கு-ரை: விருத்தகுமாரபாலராகிக் கங்கையைச் சடைமேற்கரந்த பெருமானே, நின்னடிபரவும் ஆடல் பாடலையுடைய அடியார்களின் இடரைக் களைவாயாக என்கின்றது. கருத்தனாகி - முழுமுதற் கடவுளாகி. அருத்தன் - பொருளானவன். நிருத்தர் - ஆனந்தத்தால் நிருத்தம் செய்பவர். கீதம் - பாடுவபவர்.

7. பொ-ரை: திருநெடுங்களம் மேவிய இறைவனே, உமையம்மையைத் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவனே, அரி, எரி, காற்று ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கூட்டிய ஒப்பற்ற கொடிய அம்பினால் வேதவழக்கோடு பகை கொண்ட அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த மன்னவனே, கொடி மீது இடபத்தை இலச்சினையாகக் கொண்டவனே, இதுவே மணம் பொருந்திய சந்தனமாகும் என்று எம்பெருமானே நீ அணிந்துள்ள திருநரற்றை விரும்பி அணியும் அடியவர்களின் இடரை நீக்கியருள்வாயாக.

கு-ரை: திரிபுரம் எரித்த மன்னவனே, விடைக்கொடி உடையவனே, நீறு அணிந்த அடியார்களது இடரைக் களைக என்கின்றது. கூறுகொண்டாய் - உமாதேவியை ஒருபாகத்துக்கொண்டவனே. மூன்றும் ஒன்றாகக்கூடிய ஓர் வெங்கணையால் - அரி, எரி, கால் என்ற மூன்றையும் ஒன்றாகக்கூட்டிய ஓர் அம்பினாலே. இதனை "எரிகாற்று அரி கோல்" என்னும் திருவீழிமிழலைப் பதிகத்தானும் அறிக. (1-11-6) மாறு - பகை. சாந்தம் - சந்தனம்.