566. குன்றினுச்சி மேல்விளங்குங்
கொடிமதில்சூ ழிலங்கை
அன்றிநின்ற வரக்கர்கோனை
யருவரைக்கீ ழடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியா
லேத்தியிராப் பகலும்
நின்றுநைவா ரிடர்களையாய்
நெடுங்களமே யவனே. 8
567. வேழவெண்கொம் பொசித்தமாலும்
விளங்கியநான் முகனுஞ்
சூழவெங்கு நேடவாங்கோர்
சோதியுளா கிநின்றாய்
__________________________________________________
8. பொ-ரை: திருநெடுங்களம் மேவிய
இறைவனே, மேருமலையின் சிகரங்கள் மூன்றில்
ஒன்றாகிய குன்றின்மேல் விளங்குவதும் கொடிகள்
கட்டப்பட்ட மதில்களால் சூழப்பட்டதுமான இலங்கை
நகர் மன்னனும், உன்னோடு மாறுபட்டுக் கயிலை
மலையைப் பெயர்த்தவனுமான அரக்கர் தலைவனாகிய
இராவணனை அரிய அம்மலையின் கீழே அடர்த்தவனே!
என்றெல்லாம் நல்ல தோத்திரங்களைக் கூறி இரவும்
பகலும் உன்னையே ஏத்தி நின்று மனம் நையும்
அடியவர்களின் இடர்களைப் போக்கியருளுவாயாக.
கு-ரை: இராவணனை அடர்த்தாய் என்று
தோத்திரித்து, இராப்பகலாக உருகித் தொழுகின்ற
அடியார்களின் இடரைக் களைவாயாக என்கின்றது.
உச்சிமேல் விளங்கும் இலங்கைக் குன்றின் - மேரு
மலையில் இருந்து, வாயுதேவனால் பெயர்த்து
வீழ்த்தப்பெற்ற மூன்று சிகரங்களுள் ஒன்றாகிய
இலங்கைக் குன்றின். அன்றி - கோபித்து; பகைத்து
எனலுமாம். வாய் மொழி - தோத்திரம் நைவார் -
மனங்கனிவார்.
9. பொ-ரை: திருநெடுங்களம் மேவிய
இறைவனே, கஞ்சனால் ஏவப் பட்டுத் தன்னைக் கொல்ல
வந்த குவலயாபீடம் என்ற யானையின் கொம்புகளை
ஒடித்த திருமாலும், புகழ்பெற்ற நான்முகனும்,
தங்களைச் சூழ்ந்துள்ள இடமெங்கும் தேடுமாறு
இருவருக்கும் இடையே சோதிப் பிழம்பாய்த்
தோன்றி நின்றவனே, பன்றியினது
|