கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான்
கேடிலாப்பொன் னடியின்
நீழல்வாழ்வா ரிடர்களையாய்
நெடுங்களமே யவனே. 9
568. வெஞ்சொற்றஞ்சொல் லாக்கிநின்ற
வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந்
தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால்
தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பா ரிடர்களையாய்
நெடுங்களமே யவனே. 10
__________________________________________________
கொம்பை அணிகலனாக அணிந்த பெருமானே,
அழிவற்ற உன்பொன் போன்ற திருவடி நீழலில்
வாழும் அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாய்.
கு-ரை: அயனும் மாலும் தேடச்
சோதியாய்நின்ற பெருமானே! நின்
திருவடிக்கீழ்வாழும் அடியாரது இடரைக்களைவாயாக
என்கின்றது. வேழம் - குவலயாபீடம் என்னும் யானை.
கண்ணன் கஞ்சனால் ஏவப்பட்ட குவலயாபீடம் என்னும்
பட்டத்து யானையின் கொம்பை ஓடித்தார் என்பது
வரலாறு. நேட - தேட. கேழல் - பன்றி, அடியின்நீழல்
வாழ்வார் - திருவடிச்சார்பே சார்பாகக்கொண்டு
மற்றொன்றையும் சாராத அடியார்கள்.
10. பொ-ரை: கொடுஞ் சொற்களையே தம்
சொற்களாக்கித் கொண்டு தமது வேடத்திற்குப்
பொருந்தாமல் ஒழுகும் சமணரும் நற்சார்பில்லாத
புத்தர்களும் சைவசமயம் கூறும் உண்மைப் பொருளை ஒரு
சிறிதும் உணராதவர்கள். அவர்களை விடுத்து,
திருநெடுங்களம் மேவிய இறைவனே! அழியாப் புகழுடைய
வேதங்களோடு, தோத்திரங்களால் நின்னைப் பரவி
நின் திருவடிகளை நெஞ்சில் கொண்டு வாழும்
அடியவர்களின் இடர்களைப் போக்கியருளுவாயாக.
கு-ரை: சமணரும் புத்தரும் பொருளுண்மை
அறியாதவர்கள், ஆதலால் அவர்கள் உரையை விட்டு
நின்னடியையே நெஞ்சில்
|