569. நீடவல்ல வார்சடையான்
மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழு மாமறுகிற்
சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை
ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார்
பாவம்ப றையுமே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
வைப்பாரது இடர்களைவாய் என்கின்றது.
வெம் சொல் - கொடுஞ் சொல். சமணர்கள்
கொடுஞ்சொல்லையே எப்பொழுதும் பேசி,
கொண்டவேடத்திற்குப் பொருந்தாதிருப்பர் எனக்
குறிப்பிடப்படுகிறது. தஞ்சம் - நற்சார்பு.
சாக்கியர் - புத்தர். தத்துவம் - பொருளுண்மை.
துஞ்சல் இல்லா - இறவாத. வாய்மொழி - வேதம்.
11. பொ-ரை: மேலும் மேலும் நீண்டு
வளரத்தக்க சடைமுடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய
திருநெடுங்களத்தை, பெரியோர் பலர் வாழும் பெரிய
வீதிகளை உடைய சிரபுரம் என்னும் சீகாழிப்
பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன் போற்றிப்
பாடிய, நன்மைப் பொருளால் ஆராய்ந்து உணரத்தக்க
இப்பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்களின்
பாவங்கள் விலகும்.
கு-ரை: இப்பாடல் பத்தும்
பாடவல்லார் பாவம் பறையும் எனப் பயன்கூறுகிறது.
நீடவல்லவார்சடையான் - மேலும் வளரத்தக்க நீண்ட
சடையையுடையவன். சேடர் - இளைஞர். ஒவ்வொரு பாடலும்
ஒவ்வொருபனுவல்போல் பயன்விளைத்தலின்
பனுவல்மாலை எனப்பட்டது.
|