55. திருமாற்பேறு
பதிக வரலாறு:
திருஞானசம்பந்தப் பெருமான்,
திருக்கச்சிமேற்றளியை வணங்கி
எழுந்தருளியிருக்கின்ற காலத்து, ஒரு நாள்,
பாலியாற்றுத் தென் கரை வழியாகச் சென்று
திருமாற்பேறு என்னுந் தலத்தையடைந்தார்கள்,
முப்புரம் வென்ற முதல்வரை வணங்கி ‘ஊறியார்தரு’
என்னும் இப்பதிகத்தை அருளிச்செய்தார்கள். இதனை
மொழி மாலை எனச் சிறப்பிப்பர் சேக்கிழார்
பெருமான்.
பண் : பழந்தக்கராகம்
பதிக எண்: 55
திருச்சிற்றம்பலம்
591. ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை
நீறு சேர்திரு மேனியர்
சேறு சேர்வயற் றென்றிரு மாற்பேற்றின்
மாறி லாமணி கண்டரே. 1
592. தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை
அடைவா ராமடி கள்ளென
__________________________________________________
1. பொ-ரை: சேற்று வளம் நிறைந்த
வயல்கள் சூழ்ந்த அழகிய திருமாற்பேற்றில்
ஒப்பற்ற நீலமணி போன்ற கண்டத்தை உடைய இறைவர்,
கடலிடத்தே ஊறிப் பொருந்திவந்த நஞ்சினை உண்டு
உமையம்மையோடு கூடியவராய்த் திருநரறு பூசி
திருமேனியராய் விளங்குகிறார்.
கு-ரை: நஞ்சத்தையுண்டு, உமையும்
நீறும் சேர்ந்த திருமேனியர் மாற்பேறர்
என்கின்றது. ஊறி ஆர் தரு நஞ்சு - கடலில் ஊறி வந்த
விடம். உமை நீறுசேர் மேனி எனப் பிரிக்க. மாறிலா
- தீது செய்யாத; அருளே வழங்குகின்றது, மணிகண்டர் -
நீலகண்டர்.
2. பொ-ரை: வாய்க்கால் மடைகளில்
நீர் நிறைந்து விளங்கும் நிலையான
திருமாற்பேற்றைத் தமது இருப்பிடமாக உடையவரே,
உம்மை நினைந்து சிறந்த மாலைகளைத் தொடுத்து
ஏந்திய கையின
|