பக்கம் எண் :

 55. திருமாற்பேறு683


மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே
றுடையீ ரேயுமை யுள்கியே. 2

593. பையா ரும்மர வங்கொடு வாட்டிய
கையா னென்று வணங்குவர்
மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற
ஐயா நின்னடி யார்களே. 3

594. சால மாமலர் கொண்டு சரணென்று
மேலை யார்கள் விரும்புவர்
மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று
நீல மார்கண்ட நின்னையே. 4

__________________________________________________

ராய்க் காலை, மாலை இருபோதும் உம்மைத் தலைவராக எண்ணி அடியவர் அடைகின்றனர்.

கு-ரை: மாற்பேறரே உம்மை எண்ணி அடியார்கள் மாலை முதலியவற்றை ஏந்தி இருபோதும் அடைகின்றார்கள் என்கின்றது. தொடை - மாலை. இருபோதும் - காலையும் மாலையும்.

3. பொ-ரை: கருநிறம் பொருந்திய நஞ்சை உண்டு தேவர்களைக் காத்தருளிய நீலகண்டராய்த் திருமாற்பேற்றில் வீற்றிருக்கின்ற் தலைவரே, உம் அடியவர்கள் படம் பொருந்திய பாம்பைப் பிடித்து ஆட்டும் கைகளை உடையவர் என்று உம்மை வணங்குவார்கள்.

கு-ரை: நின்னடியார்கள் நின்னை அரவமாட்டிய கையான் என்று வணங்குவார்கள் என்கின்றது. பை - படம். மை - கருமை.

4. பொ-ரை: திருமால் வழிபாடு செய்து அருள் பெற்றதால் திருமாற்பேறு என வழங்கும் இத்தலத்தில் விளங்கும் நீலநீறம் பொருந்திய கண்டத்தை உடையவரே, நும்மை மேன்மை மிக்க பெரியோர்கள் மிகுதியான நறுமலர்களைக்கொண்டு அர்ச்சித்து உம்மையே சரண் என்று விரும்பி வழிபடுவர்.

கு-ரை: நீலகண்ட, உயர்ந்தோர்கள் மலர்கொண்டு நின்னை வழிபடுவார்கள் என்கின்றது. சால - மிக. மேலையோர்கள் - உயர்ந்தோர்கள் மாலினார் வழிபாடுசெய் மாற்பேறு என்றது இத்தல வரலாற்றுக் குறிப்பு.