பக்கம் எண் :

684திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


595. மாறி லாமணி யேயென்று வானவர்
ஏற வேமிக வேத்துவர்
கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின்
நீற னேயென்று நின்னையே. 5

596. உரையா தாரில்லை யொன்றுநின் றன்மையைப்
பரவா தாரில்லை நாள்களும்
திரையார் பாலியின் றென்கரை மாற்பேற்
றரையா னேயரு ணல்கிடே. 6

* * * * * * * 7

597. அரச ளிக்கு மரக்க னவன்றனை
உரைகெ டுத்தவ னொல்கிட

__________________________________________________

5. பொ-ரை: உமையம்மையை ஒரு கூற்றாகக் கொண்டவரே, விளங்கும் திருமாற்பேற்றில் வெண்ணீறு பூசி விளங்குபவரே, ஒப்பற்ற மாணிக்கமணியே என்று உம்மையே வானவர் மிகமிக ஏத்தி மகிழ்வர்.

கு-ரை: நின்னைத் தேவர்கள் மாறிலாமணியே என்று ஏத்துவர் என்கின்றது. சில ரத்தினங்களை அணிந்தால் தீமையும் செய்யக் கூடும்; இந்தமணி எத்தகையோர்க்கும் இன்பமே செய்தலின் மாறிலாமணியே என்றார். ஏறவே - மிக. தாமுயர என்றுமாம்.

6. பொ-ரை: அலைகள் பொருந்திய பாலியாற்றின் தென்கரையில் விளங்கும் திருமாற்பேற்றில் விளங்கும் அரசனே, பொருந்திய நின் பெருந்தன்மையை வியந்து உரையாதார் இல்லை. நாள்தோறும் உன் பெருமைகளைப் பரவாதவர் இல்லை. அருள் நல்குவீராக.

கு-ரை: திருமாற்பேற்று அரைசனே, உன்னைப் புகழாதாரும், பரவாதாரும் இல்லை என்கின்றது. இத்தல பாலியாற்றுத் தென்கரையது என்பது குறிக்கப்பெறுகின்றது.

7. * * * * *

8. பொ-ரை: இலங்கை நாட்டை ஆளும் இராவணனின் புகழை மங்கச் செய்து, பின் அவன் பிழை உணர்ந்து வேண்டிய அளவில்