வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளைப்
பரவி டக்கெடும் பாவமே. 8
598. இருவர் தேவருந் தேடித் திரிந்தினி
ஒருவ ராலறி வொண்ணிலன்
மருவு நீள்கழன் மாற்பேற் றடிகளைப்
பரவு வார்வினை பாறுமே. 9
599. தூசு போர்த்துழல் வார்கையிற் றுற்றுணும்
நீசர் தம்முரை கொள்ளெலும்
தேச மல்கிய தென்றிரு மாற்பேற்றின்
ஈச னென்றெடுத் தேத்துமே. 10
__________________________________________________
அவனுக்கு வரங்கள் பலவற்றையும்
மிகுதியாக அளித்தருளிய எமது திரு மாற்பேற்று
அடிகளைப் பரவப் பாவம் கெடும்.
கு-ரை: இராவணன் வலிகெடுத்து
வரமளித்த இறைவனைப் பரவப் பாவம் கெடும்
என்கின்றது, உரை - புகழ். ஒல்கிட - பணிய.
9. பொ-ரை: திருமால் பிரமன் ஆகிய
இருவரும் அடிமுடி காணத்தேடித் திரிந்தும் ஒருவராலும்
அறிய ஒண்ணாத இயல்பினனாகிய, திருமாற்பேற்றுள்
விளங்கும் சிவபிரானுடைய பெருமை விரிந்த
திருவடிகளைப் பரவித் துதிப்பார் வினைகள் கெடும்.
கு-ரை: இறைவன் அடிகளைப் பரவுவார்
வினைசிதறும் என்கின்றது. தேவர் இருவர் - அயனும்
மாலும். இருவர் தேடியும் ஒருவராலும் அறிய முடியாதவன்
என்பது கருத்து.
10. பொ-ரை: ஆடையை மேனிமேற்
போர்த்து உழல்வோரும், கைகளில் உணவை ஏற்று
உண்ணும் இழிந்தோருமாகிய புத்த, சமணர்களின்
உரைகளை மெய்யெனக் கொள்ளாதீர். புகழ்
பொருந்திய அழகிய திருமாற்பேற்றுள் விளங்கும்
ஈசன் என்று பெருமானைப் புகழ்ந்து போற்றுமின்.
கு-ரை: சமணர் புத்தர் சழக்குரை
கொள்ளாதீர்; திருமாற் பேற்றீசன் என்று ஏத்தும்
என்கின்றது. தூசு - ஆடை. துற்று - உணவு. நீசர்
-இழிந்தவர். கொள்ளெலும் - கொள்ளாதீர்கள்; இது
அரு வழக்கு. தேசம் - ஒளி.
|